- Home
- Cinema
- நிர்வாண போஸ் கொடுத்த ரன்வீர் சிங் மீது போலீஸில் புகார்! அடுத்த டார்கெட் விஷ்ணு விஷாலா?- கலக்கத்தில் FIR நாயகன்
நிர்வாண போஸ் கொடுத்த ரன்வீர் சிங் மீது போலீஸில் புகார்! அடுத்த டார்கெட் விஷ்ணு விஷாலா?- கலக்கத்தில் FIR நாயகன்
Vishnu vishal : நிர்வாணமாக போட்டோ வெளியிட்ட ரன்வீர் சிங் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பின்பற்றிய விஷ்ணு விஷால் மீதும் அடுத்ததாக புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நிர்வாணமாக போடோஷூட் நடத்துவது ஹாலிவுட் நடிகர், நடிகைகள் மத்தியில் பிரபலமாக இருந்த நிலையில், தற்போது இந்திய நடிகர்களும் அந்த டிரெண்டை பின்பற்ற தொடங்கி உள்ளனர். கடந்த மாதம் நடிகர் விஜய் தேவரகொண்டா தான் நடித்துள்ள லிகர் படத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தபடி இருந்த போஸ்டர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னணி பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், ஆடை எதுவும் அணியாமல் நியூடாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். ரன்வீரின் இந்த் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வைரல் ஆகின.
இந்த புகைப்படங்களுக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அவரைப் பின்பற்றி தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் நிர்வாணமாக படுக்கையில் படுத்தபடி போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் இந்த புகைப்படங்களை தனது மனைவி ஜுவாலா கட்டா எடுத்ததாகவும் விஷ்ணு விஷால் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்... Anjali Nair : மறுமணம் ஆன ஐந்தே மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த அண்ணாத்த பட நடிகை - ஷாக் ஆன ரசிகர்கள்
இதனிடையே நேற்று நடிகர் ரன்வீர் சிங் மீது மும்பை போலீஸில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த அந்த புகாரில், நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டு பெண்களின் உணர்வுகளை ரன்வீர் சிங் புண்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரன்வீர் சிங் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பின்பற்றி நிர்வாணமாக போட்டோ வெளியிட்ட விஷ்ணு விஷால் மீதும் அடுத்ததாக புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் விஷ்ணு விஷால், தன்மீதும் புகார் வந்துவிடுமோ என்கிற கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... நிர்வாண போஸ் கொடுத்த ரன்வீர் சிங்...வழக்கு பதிவு செய்த போலீசார்!