சினிமா படிக்க விரும்புவர்களுக்கு 100 சதவிகித உதவித்தொகையுடன் சேர்க்கை; எங்கு தெரியுமா?
Vetrimaaran Film Institute : சினிமா பற்றி படிக்க விரும்புவர்களுக்கு 100 சதவிகித உதவித் தொகயுடன் பிஎஸ்சி படிப்பிற்கான சேர்க்கை வெற்றிமாறன் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.

சினிமா படிக்க விரும்புவர்களுக்கு 100 சதவிகித உதவித்தொகையுடன் சேர்க்கை; எங்கு தெரியுமா?
Vetrimaaran Film Institute : நாளுக்கு நாள் சினிமா மீதான மோகம் அதிகரித்து வருகிறது. படித்துக் கொண்டிருக்கும் போதே சினிமா மீதான ஆர்வமும், ஆசையும் வந்து விடுகிறது. இதற்கு காரணம் நான் அன்றாடம் பாக்கும் சீரியல்கள், படங்கள் தான். எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட வேண்டும், நடிகரோ, இயக்குநரோ ஆக வேண்டும் என்று கனவுடன் ஒவ்வொருவரும் கோடம்பாக்கம் நோக்கி படையெடுக்கின்றனர்.
Madhavan: மாதவன் நடிக்கும் ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று பட டைட்டில் லுக் வெளியானது!
சினிமா படிக்க விரும்புவர்களுக்கு 100 சதவிகித உதவித்தொகையுடன் சேர்க்கை; எங்கு தெரியுமா?
இன்னும் சிலர், ரீல்ஸ், யூடியூப் மூலமாக பிரபலமாகி எளிதாக சினிமாவில் நுழைந்து விடுகின்றனர். சினிமாவிற்கு வருவது என்பது இப்போது எளிதான ஒன்றா மாறி வருகிறது. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் வரும் பாடல்கள், ரொமாண்டிக் காட்சிகளை கொண்டு ஒவ்வொருவரும் ரீல்ஸ் வெளியிட்டு அதனை டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தான் சினிமா பற்றி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு வெற்றிமாறன் சினிமா கல்லூரியானது அதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
Sai Pallavi: திருமணத்திற்காக பாட்டி கொடுத்த சேலையை; சாய் பல்லவி ஏற்ற சபதம் நிறைவேறுமா?
சினிமா படிக்க விரும்புவர்களுக்கு 100 சதவிகித உதவித்தொகையுடன் சேர்க்கை; எங்கு தெரியுமா?
வெற்றிகளின் நாயகன் என்று சொல்லப்படும் இயக்குநர் வெற்றிமாறன் தான் இயக்கிய எல்லா படங்களையும் ஹிட் கொடுத்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு பிறகு ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை 1 மற்றும் விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தனுஷை வைத்து மட்டும் 4 படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா படிக்க விரும்புவர்களுக்கு 100 சதவிகித உதவித்தொகையுடன் சேர்க்கை; எங்கு தெரியுமா?
இந்த நிலையில் தான் சினிமா பற்றி படிக்க விரும்புவர்களுக்கு வெற்றிமாறன் சினிமா கல்லூயில் அதற்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. வெற்றிமாறன் சினிமா கல்லூரியில் B.Sc திரைப்படப் படிப்புக்கான சேர்க்கை தொடங்கியது. அதுமட்டுமின்றி 100% உதவித்தொகை வழங்கப்படுகிறது. சென்னையில் இயங்கி வரும் வெற்றிமாறனின் சர்வதேச திரைப்படம் மற்றும் கலாச்சார நிறுவனத்தில் 3 ஆண்டு இளங்கலை திரைப்பட படிப்புக்கான 2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா படிக்க விரும்புவர்களுக்கு 100 சதவிகித உதவித்தொகையுடன் சேர்க்கை; எங்கு தெரியுமா?
வெற்றிமாறனின் கல்லூரியில் இளங்கலை திரைக்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் https://iifcinstitute.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம். மேலும் தகவல்களுக்கு 9363285306 என்ற தொலைப்பேசி எண்ணிற்கும் iifcinstituteofficial@gamil.com என்ற மின்னஞ்சல் முகவரிலும் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.