- Home
- Cinema
- ஆதிபுருஷ் பட விழாவிற்கு 24 கேரட் தங்கத்தால் ஆன சேலையை அணிந்து வந்த கீர்த்தி சனோன் - அதன் விலை இவ்வளவா?
ஆதிபுருஷ் பட விழாவிற்கு 24 கேரட் தங்கத்தால் ஆன சேலையை அணிந்து வந்த கீர்த்தி சனோன் - அதன் விலை இவ்வளவா?
பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்திருக்கும் கீர்த்தி சனோன் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு தங்கத்தால் ஆன சேலையை அணிந்து வந்துள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ராமனாக பிரபாஸ் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்திருக்கிறார்.
ஆதிபுருஷ் திரைப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வருகிற ஜூன் மாதம் 16-ந் தேதி ஆதிபுருஷ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. பாகுபலியைப் போல் இப்படத்தையும் பான் இந்தியா படமாகவே ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... காசுக்காக இப்படியா வாய்கூசாம பொய் சொல்லுவீங்க... நடிகை ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?
ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரபாஸ், நடிகை கீர்த்தி சனோன், இயக்குனர் ஓம் ராவத் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு நடிகை கீர்த்தி சனோன் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்து கலந்துகொண்டார். அவர் அணிந்து வந்த சேலை பற்றிய ஆச்சர்ய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
அதன்படி கீர்த்தி சனோன் அணிந்து வந்திருந்த சேலை 24 கேரக்ட் தங்கம் கலந்து உருவாக்கப்பட்டதாம். அவர் அணிந்திருந்த பிளவுஸில் மரகத கற்கள் டிசைனுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்ததாகவும், சீதையின் தூய்மையை பறைசாற்றும் விதமாக தூய துணிகளைப் பயன்படுத்தி இந்த சேலையை தயார் செய்ததாக அதன் டிசைனர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சேலையின் விலையை அவர்கள் வெளியிடாவிட்டாலும், இதன் மதிப்பு நிச்சயம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மகன் பிறந்ததும் மும்பையில் அட்லீ வாங்கிய ஆடம்பர பங்களா... யம்மாடியோ! அதன் மதிப்பு இத்தனை கோடியா?