மகன் பிறந்ததும் மும்பையில் அட்லீ வாங்கிய ஆடம்பர பங்களா... யம்மாடியோ! அதன் மதிப்பு இத்தனை கோடியா?
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, மும்பையில் ஆடம்பர பங்களா ஒன்றை சொந்தமாக வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த அட்லீக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் தெறி. அப்படமும் வேறலெவல் ஹிட் அடித்ததால், தன்னுடைய மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பை அட்லீக்கு கொடுத்தார் விஜய்.

விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நடிகர் ஷாருக்கான் உடன் கூட்டணி அமைத்துள்ள அட்லீ, அவர் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஷாருக்கானின் மனைவி கெளரிகான் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... வனிதா மகனா இது... மளமளவென வளர்ந்து ஆக்ஷன் ஹீரோ போல் மாறிய ஸ்ரீஹரி - வைரலாகும் போட்டோஸ்
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஜவான் படத்தில் பிசியாக இருக்கும் இயக்குனர் அட்லீக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் மீர் என பெயரிட்டுள்ளதாக ஷாருக்கான் அண்மையில் அறிவித்தார். மகன் பிறந்துள்ள இந்த சமயத்தில் இயக்குனர் அட்லீ மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு சொகுசு பங்களா ஒன்றை சொந்தமாக வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் அட்லீ வாங்கி உள்ள பங்களாவின் மதிப்பு ரூ.38 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஜவான் படத்துக்கு பின்னர் அட்லீக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும், அதன் காரணமாகவே அவர் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜவான் படத்துக்கு பின்னர் அட்லீ பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்... காணாமல் போன முக்கிய பொருள்... ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்