Keerthy Suresh Love: கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்! முதல் முறையாக மனம் திறந்த பெற்றோர்!
நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம் குறித்து அடிக்கடி சில வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்து முதல் முறையாக, கீர்த்தி சுரேஷின் பெற்றோர் மனம் திறந்து பேசியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், முதல் படத்தில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டாலும், இரண்டாவதாக, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' படத்தின் தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார். பின்னர், மீண்டும் இரண்டாவது முறையாக... சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரெமோ படமும் சூப்பர் ஹிட் அடித்தது.
எனவே வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இருந்து, முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்த கார்த்தி சுரேஷ் அடுத்தடுத்து விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி நடிக்க துவங்கினார்.
ஆனால் இவரின் திரையுல பயணத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது, நடிகையர் திலகம் திரைப்படம் தான். பட்டிதொட்டி எங்கும் இப்படம் பேசப்பட்டது மட்டும் இன்றி, கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இப்படம் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும், கதையின் நாயகியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த 'தசரா' திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் பெற்றோரான... பழம்பெரும் நடிகை மேனகா மற்றும் சுரேஷ் அண்மையில் ஊடகமொன்றிற்கு பேட்டியொன்றை அளித்திருந்தனர். அதில் அடிக்கடி செய்தி தலைப்பாகும் கீர்த்தி சுரேஷின் காதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு மிகவும் கூலாக பதில் அளித்த அவரின் பெற்றோர், “சினிமாத் துறையைப் பொருத்தவரையில் இவ்வாறான பேச்சுக்கள், மற்றும் கிசுகிசுக்கள் அதிகம் எழுவது வழக்கமான ஒன்று தான். அவர் உண்மையில் யாரையாவது காதலித்தால், அதை எங்களிடமே வந்து சொல்லப் போகிறாள். நாங்கள் அதை அனைவருக்கும் தெரிவிக்கத்தான் போகிறோம். என கூறியுள்ளனர். இப்படி பட்ட பேச்சுகள் அவர் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்பதன் அர்த்தம். எனவே நாங்கள் இதனை பெரிதாக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளனர்.
லோ நெக் ஜாக்கெட்டில்... இன்ஸ்டாகிராமை சூடேற்றிய கீர்த்தி சுரேஷ்! தாறுமாறு லுக்கில் செம்ம ஹாட் போஸ்!