- Home
- Cinema
- உங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா..? சூரிய ஒளியில்... மேக்கப் போடாமல் மிளிரும் பேரழகில் நதியா லேட்டஸ்ட் போட்டோஸ்!
உங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா..? சூரிய ஒளியில்... மேக்கப் போடாமல் மிளிரும் பேரழகில் நதியா லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை நதியா வெள்ளை நிற சல்வாரில்... சன் செட் முன்பு எடுத்து கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு வெளியான 'பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே... துரு துரு பெண் கதாபாத்திரத்தில், மாடர்ன் உடையில் வலம் வந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தது மட்டும் இன்றி, பல முன்னணி நடிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இந்த படத்தை தொடர்ந்து, மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, பூமழை பொழிகிறது, சின்னத்தம்பி பெரியதம்பி, பாடு நிலவே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா, ராஜகுமாரன், சின்ன மேடம் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமானார்.
மேலும் அன்புள்ள அப்பா என்கிற படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். குறிப்பாக இவர் திரைப்படங்களில் போட்டு நடிக்கும் கொண்டை, பொட்டு, டிரெஸ்ஸிங் முதல் கொண்டு தனித்துவம் கொண்டதாக இருந்ததால், நதியா கொண்டை, நதியா பொட்டு என... குறிப்பிட்டு கூறும் அளவிற்கு அமைந்தது.
தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மிகவும் பரபரப்பாக நடித்து வந்த, நதியா... 1988 ஆம் ஆண்டு, ஷிரிஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் பின்னர் கணவருடன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆனார். தற்போது இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், குழந்தைகள் பிறந்து நன்கு வளர்த்த பின்னர் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த வகையில்... கடந்த 2007 ஆம் ஆண்டு ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமியின் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் நதியா," தாமிரபரணி, சண்டை, என அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ராம் போத்தினேனியின் தி வாரியர் படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் நதியா.
சமூக வலைத்தளத்தில் எப்போதுமே மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர்... தற்போது வெள்ளை நிற சல்வார் அணிந்து, சூரியன் முன்பு அமர்ந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.