- Home
- Cinema
- மாலத்தீவில் பிகினி போட்டோஷூட்... டூபீஸில் ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் வேதிகா - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்
மாலத்தீவில் பிகினி போட்டோஷூட்... டூபீஸில் ஹாட் போஸ் கொடுத்து கிக் ஏற்றும் வேதிகா - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்
vedhika : தமிழில் முனி, காளை, பரதேசி, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்த நடிகை வேதிகா, மாலத்தீவில் நடத்திய பிகினி போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வருபவர் வேதிகா. இவர் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான மதராசி படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து முனி படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் சிம்புவுடன் காளை, அருண்விஜய்யின் மலை மலை என கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த இவர், பாலா இயக்கிய பரதேசி படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்தார். கடைசியாக தமிழில் இவர் நடித்த படம் என்றால் அது காஞ்சனா 3 தான். இதில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மீது ராட்சத திரை விழுந்து விபத்து - பதைபதைக்க வைக்கும் வீடியோ உள்ளே
அதன்பின் இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களில் பிசியானதால் தமிழ் படங்களில் இவர் கடந்த 3 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது இவர் கைவசம் வினோதன், ஜங்கிள் போன்ற தமிழ் படங்களும், கனா என்கிற கன்னட படமும், நாளாம் தூனு என்கிற மலையாள படமும் உள்ளது.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் வேதிகா சமீப காலமாக கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு கடலுக்கு நடுவே பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்தவாரு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். வேதிகாவின் படு கவர்ச்சியான இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... மும்பையில் போனிகபூர் பட ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட்டில் தீ விபத்து - ஒருவர் உடல் கருகி பலி