தேசிய விருதுக்கு தகுதியானவர் கார்த்தி ...புகழ்ந்து தள்ளிய வடிவுக்கரசி!
சூர்யா தேசிய விருதை வாங்கிட்டார். இவருக்கு விருது எப்பவோ கிடைத்திருக்க வேண்டும். அதேபோல கண்டிப்பாக கார்த்தியும் தேசிய விருது வாங்குவார் எனக் கூறியுள்ளார்.
viruman
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் விருமன். இந்த படத்தை கிராமத்து நாயகனின் கதைகளை இயக்கும் முத்தையா இயக்கியுள்ளார். சங்கரின் மகள் அதிதி நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் மூலம் அதிதி சங்கர் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, ஆர் கே சுரேஷ், மனோஜ் பாரதி உள்ளிட்டோர் இதில் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 12ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
viruman
இதில் வடிவுக்கரசி கார்த்தியின் அப்பாவாக நடித்து பாராட்டை பெற்று வருகிறார். இந்நிலைகள் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய வடிவுக்கரசி, கார்த்திக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என கூறி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...வெள்ளித்திரையில் வாய்ப்பு இல்லாததால்.. சன் டிவிக்கு திரும்பிய ராதிகா?
அந்த பேட்டியில், கார்த்தியின் அப்பத்தாவாக நடித்த அனுபவம் குறித்து கேட்டதற்கு பதில் கூறிய வடிவுக்கரசி, கார்த்தியின் நடிப்பு அவரது தந்தை சிவக்குமாரை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. எல்லா வாரிசுகளும் இது வந்துராது. அவரது அப்பா எப்படி சினிமா துறையில் சிறந்து விளங்கினாரோ அதைவிட பல மடங்கு அவங்களோட ரெண்டு பசங்களும் இருக்காங்க .சூர்யா தேசிய விருதை வாங்கிட்டார். இவருக்கு விருது எப்பவோ கிடைத்திருக்க வேண்டும். அதேபோல கண்டிப்பாக கார்த்தியும் தேசிய விருது வாங்குவார் எனக் கூறியுள்ளார்.
vadivukkarasi
அதேபோல ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து பேசி இருந்த இவர், ரஜினியை அநாதை என அருணாச்சலம் படத்தில் ஒரு டயலாக் இருக்கும். ரஜினியை பார்த்து பேச தயங்கியதாகவும், பின்னர் சிரமப்பட்டு பேசியதாகவும் கூறியுள்ளார். 80 வயது கிழவி போல கையில் தடியுடன் படிக்கட்டில் இருந்து இறங்கி வந்து அந்த டயலாக்கை பேசினேன். இது ரொம்பவே ஒரு கஷ்டமான டயலாக் இருந்தது. திடீர்னு கைதட்டல் சத்தம் கேட்டுச்சு யாருன்னு திரும்பி பார்த்தா ரஜினி சார் தான். அந்த இடத்தில் சுமார் 2500 பேர் இருந்தாங்க அவ்வளவு பேரும் கைதட்டும் போது ரஜினி சார் வந்து ரொம்ப நல்லா நடிச்சீங்கன்னு பாராட்டினார்.
மேலும் செய்திகளுக்கு...சூர்யாவின் 'இரும்பு கை மாயாவி' சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
இந்த படம் தனக்கு மறக்கமுடியாதாக படமாக இருந்தது என நடிகை வடிவுக்கரசி தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.