நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம்... லெஜண்ட் பட நாயகிக்கு வாரி வழங்கிய அண்ணாச்சி - எத்தனை கோடி தெரியுமா?
Urvashi Rautela salary : தி லெஜண்ட் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி உள்ள நடிகை ஊர்வசி ரவ்துலா, அப்படத்திற்காக நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கி உள்ளாராம்.
விளம்பர படங்களில் நடித்து பிரபலமான தொழிலதிபர் சரவணன் அருள், சினிமாவில் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் தி லெஜண்ட். இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்தில் விஜயகுமார், பிரபு, மயில்சாமி, யோகிபாபு, விவேக், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசை, வேல்ராஜின் ஒளிப்பதிவு என மிகப்பெரிய டெக்னிக்கல் டீமும் பணியாற்றி உள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த ஜூலை 28-ந் தேதி ரிலீஸ் செய்திருந்தனர்.
உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வசூலும் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லெஜண்ட் படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... பொதுவெளியில் செக்ஸ்... விஜய் தேவரகொண்டாவின் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்!
அதன்படி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை ஊர்வசி ரவ்துலாவுக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தனைக்கு தமிழில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். முதல் படத்திலேயே இத்தனை கோடி சம்பளமா என கோலிவுட்டே ஷாக் ஆகிப்போய் உள்ளது.
சொல்லப்போனால் தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாகவும், லேடி சூப்பர்ஸ்டாராகவும் வலம் வரும் நயன்தாராவே அதிகபட்சமாக ஒரு படத்திற்கு ரூ.10 கோடி தான் சம்பளம் வாங்குகிறார். அப்படி இருக்கையில் அறிமுக நடிகை ஒருவரும் அவரை விட டபுள் மடங்கு சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது வியப்பாக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... “உண்மையிலேயே நடிகர் அஜித் ஒரு நைஸ் ஜென்டில்மேன்” - காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி ஓபன் டாக்!