MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 16 வயதிலேயே படைத்த சாதனை.. 25 வருடத்திற்கு முன் எடுத்த Throw Back போட்டோ வெளியிட்டு அசத்திய த்ரிஷா!

16 வயதிலேயே படைத்த சாதனை.. 25 வருடத்திற்கு முன் எடுத்த Throw Back போட்டோ வெளியிட்டு அசத்திய த்ரிஷா!

Actress Trisha : பிரபல நடிகை த்ரிஷா, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 01 2024, 11:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Trisha

Actress Trisha

சென்னையில் பிறந்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை மிக நேர்த்தியாக பேசத் தெரிந்த ஒரு நடிகை தான் திரிஷா கிருஷ்ணன். இளம் வயதிலேயே மாடலிங் துறையில் களமிறங்கிய திரிஷா, கடந்த 1999ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான "ஜோடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். அந்த திரைப்படத்தின் நாயகி சிம்ரனின் தோழிகளில் ஒருவராக நடித்திருப்பார் திரிஷா. அதன்பிறகு சுமார் மூன்று ஆண்டு காலம் தனக்கான சரியான வாய்ப்பை தேடி கோலிவுட் உலகில் பயணித்து வந்த திரிஷாவிற்கு கிடைத்த வாய்ப்பு தான், 2002ம் ஆண்டு பிரபல இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான சூர்யாவின் "மௌனம் பேசியதே" என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு. 

Bigg Boss Season 8 : விஜய் சேதுபதி மாஸாக அசத்திய பிக் பாஸ் ப்ரோமோ.. உருவானது எப்படி? வெளியான டக்கர் வீடியோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actress Trisha Krishnan

Actress Trisha Krishnan

அந்த திரைப்படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரம் தான் அவர் ஏற்று நடித்தார் என்றாலும், மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதை தொடர்ந்து வெளியான "மனசெல்லாம்", "சாமி", "லேசா லேசா", "அலை" மற்றும் "எனக்கு 20 உனக்கு 18" ஆகிய திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் திரிஷாவிற்கு நல்ல ஒரு பெயரை பெற்று கொடுத்தது. இதற்கு இடையில் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். தொடர்ச்சியாக தனக்கு கிடைத்த சிறப்பான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட நடிகை திரிஷாவிற்கு, பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்த திரைப்படம் என்றால், கடந்த 2004 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் தரணி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான "கில்லி" திரைப்படம் தான் என்றால், அது கொஞ்சம் கூட மிகை ஆகாது.

34
Actress Trisha Movies

Actress Trisha Movies

அவருடைய இந்த 25 ஆண்டு கால சினிமா பயணத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட" திரைப்படத்தில் நடித்திருந்த திரிஷாவிற்கு, அதன் பிறகு ஒரு சில ஆண்டுகள் பெரிய அளவில் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்தது. இந்த சூழலில் தான் கடந்த 2023ம் ஆண்டு வெளியான "லியோ" திரைப்படம் அவருக்கு ஒரு கம் பேக் திரைப்படமாக அமைந்தது. இந்த 2024ம் ஆண்டில் ஏற்கனவே கோட் படத்தில் கேமியோவில் நடித்த த்ரிஷாவிற்கும் மேலும் ஒரு படம் வெளியாகவுள்ளது. மேலும் 2025ம் ஆண்டில் 5 திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது.

44
Trisha miss chennai

Trisha miss chennai

இந்த சூழலில் கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி நடந்த "மிஸ் சென்னை" போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற நடிகை திரிஷா, அப்போது பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான தன்னுடைய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 16வது வயதில் இருந்த அதே அழகில் இப்போதும் அசத்தி வருகின்றார் த்ரிஷா என்றும், கோலிவுட் குயின் என்றால் சும்மாவா என்றும் அவரை பாராட்டி வருகின்றனர் அவர் ரசிகர்கள்.

"ஹீரோ எவ்வளவு சொல்லியும் கேட்கல" மிஷ்கினின் ஓவர் கான்ஃபிடன்சால் பிளாப் ஆனா படம் - வருந்திய பிரபலம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
திரிஷா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved