செல்ல மகளின் முதலாவது பிறந்தநாளை ஜாம் ஜாம்னு கொண்டாடிய நடிகை த்ரிஷா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை த்ரிஷா, நாய்க் குட்டி ஒன்றை தன்னுடைய செல்ல மகள் போல் வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குட்டியின் முதல் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Trisha Pet Dog Birthday
நடிகை த்ரிஷா சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். 40 வயதுக்கு மேலாகியும் திருமணமே செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார் த்ரிஷா. இவரைப் பற்றி அவ்வப்போது வதந்திகளும் பரவும். அந்த வகையில் அண்மையில் கூட இவருக்கும் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி எனக்கூறி நடிகை த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்தார்.
த்ரிஷாவின் மகள்
நடிகை த்ரிஷாவுக்கு திருமணம் ஆகாவிட்டாலும் அவருக்கு ஒரு வயதில் மகள் இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுதான் உண்மை. அதை த்ரிஷாவே தன்னுடைய இன்ஸ்டா பயோவில் குறிப்பிட்டு இருக்கிறார். நான் இஸ்ஸி-யின் அம்மா என போட்டிருக்கிறார். சரி... யார் அந்த இஸ்ஸி என்று தானே கேட்கிறீர்கள். இஸ்ஸி என்பது நடிகை த்ரிஷாவின் செல்ல நாய்க்குட்டி. அதைத் தான் தன்னுடைய மகள் போல் வளர்த்து வருகிறார் த்ரிஷா.
பிறந்தநாள் கொண்டாட்டம்
தன்னுடைய மகளான இஸ்ஸிக்கு முதலாவது பிறந்தநாள் விழா கொண்டாடி இருக்கிறார் த்ரிஷா. தன்னுடைய வீட்டில் உள்ள கார்டன் ஏரியாவில் அலங்காரங்கள் செய்து, தன்னுடைய நாய்க் குட்டிக்காக பிரத்யேகமாக கேக் ஒன்றை வாங்கி, அந்த நாய்க்குட்டிக்கு ஆடை அணிவித்து க்யூட்டாக பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார் த்ரிஷா. அதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் த்ரிஷா. அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
குவியும் கமெண்ட்ஸ்
நடிகை த்ரிஷா, தன்னுடைய செல்ல நாய்க்குட்டி இஸ்ஸிக்கென தனி இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஒன்றையும் வைத்திருக்கிறார். அதனை 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்கிறார்கள். நடிகை த்ரிஷா நாய்க்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடியதை பார்த்த நெட்டிசன்கள், நான் அந்த நாய்க்குட்டியாக இருந்திருக்க கூடாதா என ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.