காதலர் தினத்தில் த்ரிஷா வீட்டிற்கு வந்த புதியவர் – வைரலாகும் காதலர் தின பதிவு!
Trisha Valentines Day 2025 Instagram Post : காதலர் தினமான நேற்று த்ரிஷா வீட்டிற்கு புதிதாக ஒருவர் வந்திருக்கிறார். அவரைப் பற்றி த்ரிஷா பகிர்ந்த பதிவு தான் இப்போது வைரலாகி வருகிறது.

காதலர் தினத்தில் த்ரிஷா வீட்டிற்கு வந்த புதியவர் – வைரலாகும் காதலர் தின பதிவு!
Trisha Valentines Day 2025 Instagram Post : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். அஜித், விஜய், சிம்பு, கமல் ஹாசன், மாதவன், சூர்யா, விக்ரம், அக்ஷய் குமார், ராணா டகுபதி ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். 1999 ஆம் ஆண்டு ஜோடி படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மௌனம் பேசியதே, சாமி, மனசெல்லாம், கில்லி, கிரீடம், ஆறு, ஆதி, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் லியோ படம் வெளியாகிருந்த நிலையில் இப்போது விடாமுயற்சி படம் வெளியாகியிருக்கிறது.
கனவில் கூட நடிகையாவேன் என்று நினைக்காத நடிகை – மீரா ஜாஸ்மினுக்கு இத்தனை கோடி சொத்தா?
காதலர் தினத்தில் த்ரிஷா வீட்டிற்கு வந்த புதியவர் – வைரலாகும் காதலர் தின பதிவு!
ஆனால், இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜூன், ஆரவ், த்ரிஷா, ரெஜினா ஆகியோரது நடிப்பில் ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தற்போது வரையில் ரூ.125 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது.
இந்தப் படத்திற்கு பிறகு குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45 மற்றும் ராம் விஸ்வம்பரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் காதலர் தினமான நேற்று த்ரிஷா பதிவிட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் புது valentine என பதிவிட்டு தன்னுடைய புது நாய்க்குட்டியை அறிமுகம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த நாய்க்குட்டிக்கு Izzy என தனது பெயரிட்டுள்ளார். My forever Valentine என்று அந்த நாய்க்குட்டி பற்றி கூறியிருக்கிறார்.
காதலர் தினத்தில் த்ரிஷா வீட்டிற்கு வந்த புதியவர் – வைரலாகும் காதலர் தின பதிவு!
சமீபத்தில் த்ரிஷா ஆசை ஆசையாக வளர்ந்து வந்த Zorro என்ற நாய்க்குட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து மன வருத்தம் அடைந்த த்ரிஷா இப்போது காதலர் தினத்தன்று தன்னுடைய வீட்டிற்கு புதிதாக ஒருவரை அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்படும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படம்!