குழந்தை பெற்றுக்கொள்வதற்கு கல்யாணம் பண்ணனும்னு அவசியமில்லை... பரபரப்பை கிளப்பிய அஜித் பட நடிகை
50 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவரும் அஜித் பட நடிகை, திருமணம் செஞ்சிக்காமலே கர்ப்பம் ஆகலாம் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தபு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் இவர் காதல் தேசம், அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தாயின் மணிக்கொடி, இருவர், சிநேகிதியே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தற்போது இவருக்கு வயது 50-ஐ கடந்துவிட்டது. இருந்தபோது இதுவரை இவர் திருமணமே செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது அஜய் தேவ்கன் இயக்கத்தில் உருவாகும் கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் போலீஸாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்.... அதிர்ச்சி... கைவிரித்த குடும்பத்தினர்..! பாரதிராஜாவின் மொத்த மருத்துவச்செலவையும் ஏற்றாரா பிரபல அரசியல் தலைவர்?
இந்நிலையில், சமீபத்திய பேட்டில் ஒன்றில் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி இவர் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவர் பேசியதாவது : “எல்லா பெண்களைப் போல் எனக்கும் தாயாக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அதற்காக கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. திருமணம் செஞ்சிக்காமலே கர்ப்பம் ஆகலாம்.
எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றினால் நான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வேன். என்னைப் பொறுத்தவரை திருமணம் அவசியமில்லாத ஒன்று. குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையே இல்லை” என தபு தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படியுங்கள்.... அடேங்கப்பா..வேற லெவல் போட்டோ சூட் நடத்தி ..ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஸ்ருதிஹாசன்