உள்ளாடையோடு... காதலனுடன் ஓவர் நெருக்கமாக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட செம்ம ரொமான்டிக் போட்டோ..!
நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய காதலனுடன் ஓவர் நெருக்கமாக வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை ஸ்ருதிஹாசன் வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு, தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தன்னுடைய தந்தையின் பெயரை எந்த இடத்திலும், பயன்படுத்தாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவரின், நடிப்புக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதோ... அதையே மிஞ்சும் விதத்தில் இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
இவர், நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகியிருந்த 'கிராக்', 'பிட்டா கத்தலு' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல் தமிழில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த லாபம் திரைப்படம், விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை தராதது ஏமாற்றத்தை கொடுத்தது.
மேலும் செய்திகள்: கட்டப்பாவாக மாறிய காஜல்... பாகுபலியாக மாறி அவரது குட்டி மகன்... ராஜமௌலிக்கு டெடிகேட் செய்த வேற லெவல் போட்டோ..!
தற்போது தமிழில் ஒரு படம் கூட இவரது கை வசம் இல்லை என்றாலும், தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய காதலருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், காதலர் சாந்தனுவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளாடையோடு வெளியிட்டுள்ள வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் இருவருமே படு ரொமான்டிக்காக உள்ளனர். ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு டெல்லியை சேர்ந்த ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: கணவர் இறந்த பின் வீட்டுக்குள் முடங்கிய மீனா... வெளியே அழைத்து வந்த இரு பிரபலங்கள்! வைரலாகும் பீச் போட்டோஸ்!