உடல் எடையை குறைத்து... செம்ம ஃபிட்டாக 20 வயசு ஹீரோயின் போல் மாறிய சோனியா அகர்வால்!!
'காதல் கொண்டேன்' படத்தில் பார்த்தது போலவே... தற்போது மீண்டும் செம்ம ஸ்லிம் பிட் அழகியாக மாறியுள்ளார் சோனியா அகர்வால். இவரது ரீசென்ட் போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என தொடர் வெற்றிப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைக்கொண்டவர் நடிகை சோனியா அகர்வால்.
முன்னணி நடிகையாக இருந்த போதே... பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் சகோதரருமான, செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
ஆரம்பத்தில் பெற்றோர் சம்மதத்துடன், அழகாக துவங்கிய இவர்களது காதல் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்க வில்லை. 3 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது.
விவாகரத்திற்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய சோனியா அகர்வாலுக்கு அவர் எதிர்பார்த்தது போன்ற கதாபாத்திரம் கிடைக்காததால், சின்னத்திரை சீரியல் நாயகியாக மாறினார்.
சீரியலிலும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இவர் சீரியலை விட்டே பாதியில் வெளியேறும் நிலை உருவானது. பின்னர் சீரியலை ஓரம் கட்டி விட்டு மீண்டும் திரைப்பட வாய்ப்பை பெரும் முயற்சியில் இறங்கினார்.
மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் குணச்சித்தர பட வேடங்களை தேர்வு செய்து நடித்தார். ஆளே அடையாளம் தெரியாமல் ஓவர் வெயிட் போட்ட இவர் தற்போது மீண்டும் 20 வயசு ஹீரோயின் போல் மாறியுள்ளார்.
சில படங்களில் கதையின் நாயகியாக நடித்து வரும் இவர், நடிப்பை தாண்டி... ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.
இவரது நியூ லுக்கை பார்த்து, ரசிகர்கள் பலர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறார் என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.