MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அன்று தனது நிறத்தால் ரிஜெக்ட் ஆன நடிகை; இன்று பான் இந்தியா ஸ்டார்; நடிகரின் வருங்கால மனைவி!

அன்று தனது நிறத்தால் ரிஜெக்ட் ஆன நடிகை; இன்று பான் இந்தியா ஸ்டார்; நடிகரின் வருங்கால மனைவி!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சோபிதா துலிபாலாவின் திரை வாழ்க்கை மற்றும் சமீபகால நிச்சயதார்த்தம் குறித்த ஒரு பார்வை.

2 Min read
Author : Ramya s
Published : Aug 17 2024, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Sobhita Dhulipala

Sobhita Dhulipala

இந்த பிரபல நடிகை தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, தேவ் படேலுக்கு ஜோடியாக ஒரு ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். விக்கி கௌஷல், அனில் கபூர், அதிவி சேஷ் மற்றும் ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் அவர் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் தென்னிந்திய நடிகருக்கும் இவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அவர் வேறு யாருமில்லை.. நடிகை சோபிதா துலிபாலா தான். அவரின் திரை வாழ்க்கை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

29
Sobhita Dhulipala

Sobhita Dhulipala

1992-ம் ஆண்டு ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார் சோபிதா துலிபாலா. அவரின் தந்தை வேணுகோபால் ஆந்திரப் பிரதேசத்தில் கடற்படைப் பொறியாளராக இருந்தார். அவரின் தாய் சாந்தா காமாட்சி ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்தார்.  சோபிதாவுக்கு சமந்தா என்ற சகோதரியும் உள்ளார். விசாகப்பட்டினத்தில் வளர்ந்த சமந்தா உயர் கல்விக்காக தனது 11-வது வயதில் மும்பை சென்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மற்றும் பொருளாதார கல்லூரியில் கார்ப்பரேட் சட்டம் படித்தார்.

39
Sobhita Dhulipala

Sobhita Dhulipala

படிப்பைத் தவிர, சோபிதா துலிபாலா குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடனக் கலைஞர் ஆவார். சோபிதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அவரின் தோழி ஒருவர் மிஸ் இந்தியா அலுவலகத்தில் பயிற்சி பெற்று வந்தார். அப்போது வரவிருக்கும் போட்டிக்கான தேர்வில் கலந்து கொள்ளுமாறு பரிந்துரைத்ததை அடுத்து, அதில் பங்கேற்றார். பின்னர், சோபிதா மிஸ் எர்த் 2013 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், ஆனால் முதல் 20 இடங்களுக்குள் வர முடியவில்லை. இருப்பினும், நடிகைக்கு மிஸ் ஃபோட்டோஜெனிக், மிஸ் பியூட்டி ஃபார் எ காஸ், மிஸ் டேலண்ட் மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஃபேஸ் ஆகிய துணைத் தலைப்புகள் கிடைத்தன.

49
Sobhita Dhulipala

Sobhita Dhulipala

2016 ஆம் ஆண்டு ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் சோபிதா துலிபாலா சினிமாவில் அறிமுகமானார். அதில் விக்கி கவுஷலுக்கு ஜோடியாக நடித்தார். 2018 இல் அதிவி சேஷுடன் இணைந்து கூடாச்சாரி மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்தார்.  இருப்பினும், 2019-ம் ஆண்டு Amazon Prime ஒளிபரப்பான ​​மேட் இன் ஹெவன் சீரிஸ் சோபிதாவின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.

59
Sobhita Dhulipala

Sobhita Dhulipala

கீது மோகன்தாஸ் இயக்கிய மூத்தோன் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதே நேரத்தில், சோபிதா தி பாடி என்ற ஹிந்தி படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தார்.

69
Sobhita Dhulipala

Sobhita Dhulipala

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, 2 படங்களில் சோபிதா நடித்திருந்தார். சோபிதா பின்னர் அனில் கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோருடன் தி நைட் மேனேஜர் என்ற வெப் சீரிஸில் நடித்தார். ஹாலிவுட்டில் தேவ் படேலின் இயக்குனராக அறிமுகமான மங்கி மேன் படத்தில் நடித்திருந்தார்.

79
Sobhita Dhulipala

Sobhita Dhulipala

​​இப்போது பிரபலமான முகமாக இருக்கும் சோபிதா துலிபாலா ஒரு முறை தனது ஸ்கின் டோனுக்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.தனது நிறத்தின் காரணமாக பலமுறை நிராகரிக்கப்பட்டதாகவும் சோபிதாவே ஒருமுறை கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய அவர் “ எனது விளம்பர ஆடிஷன்களின் போது நான் கலராக இல்லை என்று பல முறை சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. முகத்திற்கு நேராகவே பலர் என்னை விமர்சித்தனர். நீங்கள் அழகாக இல்லை என்று கூறினர்.” என்று தெரிவித்தார்.

89
Sobhita Naga Chaitanya Engagement

Sobhita Naga Chaitanya Engagement

இதனிடையே நாக சைதன்யாவும் சோபிதாவும் டேட்டிங்கில் இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியான நிலையில் இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்கள் உறவை அறிவித்தனர். கடந்த 8-ம் தேதி நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

 

99
Naga Chaitanya Samantha

Naga Chaitanya Samantha

நாக சைதன்யா முன்னதாக நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். படப்பிடிப்பில் சந்தித்த இந்த ஜோடி சில நாட்கள் டேட்டிங் செய்த நிலையில் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2021-ம் ஆண்டில் நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
சோபிதா துலிபாலா
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
சொந்த கதை இல்லை, ஆனாலும் செம ஹிட்! டி.ஆரின் 'ஒன் அண்ட் ஒன்லி' ரீமேக் படம் எது தெரியுமா?!
Recommended image3
ரஜினிக்கு தேவா செதுக்கிய இசை சிம்மாசனம்! ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் 'மாஸ்' இன்ட்ரோ பாடல்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved