ஒரு டிரஸ்ஸ ஒருதடவ தான் யூஸ் பண்ணுவாங்கலாம்; விநோத பழக்கம் கொண்ட இந்த நடிகை யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்த ஒருவர், ஒருமுறை அணிந்த ஆடையை மீண்டும் அணியமட்டாராம். அவர் யார் என்பது பற்றி பார்க்கலாம்.

விநோத பழக்கம் கொண்ட நடிகை
நடிகைகள் ஆடைகள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்களின் ஆடைகளை பார்த்து இம்பிரஸ் ஆகி அதேபோல் உடைகளை வாங்க படையெடுக்கும் பெண்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அப்படி சினிமாவில் தன்னுடைய நடிப்பால் கோலோச்சிய நடிகை ஒருவர், ஒரு முறை அணிந்த ஆடையை மறுமுறை அணியக்கூடாது என்கிற பாலிசியை கடைபிடித்து வருகிறாராம். அந்த நடிகையின் இந்த விநோத பழக்கத்திற்கு ஒரு பிளாஷ்பேக் கதையும் இருக்கிறது.
புன்னகை அரசி சினேகா
அந்த நடிகை வேறுயாருமில்லை... புன்னகை அரசி சினேகா தான். இவர் கடந்த 2000-ம் ஆண்டு வெளிவந்த என்னவளே படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். இவரின் இயற்பெயர் சுஹாசினி, சினிமாவுக்காக தன் பெயரை சினேகா என மாற்றிக் கொண்டார். இவருக்கு சினிமாவில் முதல் திருப்புமுனையை கொடுத்த படம் ஆனந்தம். லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. இப்படத்தில் இடம்பெறும் ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ என்கிற ஒரே பாடல் மூலம் ரசிகர்களை இம்பிரஸ் செய்துவிட்டார் சினேகா.
இதையும் படியுங்கள்... 'கோட் ' படத்தில் சினேகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வெங்கட் பிரபு கூறிய தகவல்!
சினேகாவின் காதல்
ஆனந்தம் படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் நடிகை சினேகாவுக்கு விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினேகா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது சிரிப்பு தான். அழகாக சிரிப்பதால் அவருக்கு புன்னகை அரசி என்கிற பட்டமும் கிடைத்தது. டாப் ஹீரோயினாக வலம் வந்தபோதே நடிகர் பிரசன்னா மீது காதல் வயப்பட்ட சினேகா, அவரை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி விஹான் என்கிற மகனும், ஆத்யந்தா என்கிற மகளும் இருக்கிறார்கள்.
ஆடைகளை விரும்பும் சினேகா
திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் சினிமாவில் நடித்து வரும் சினேகா, அண்மையில் விஜய்யின் மனைவியாக கோட் படத்தில் நடித்திருந்தார். இதுதவிர சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வரும் சினேகா, சொந்தமாக துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். சினேகாலயா என பெயரிடப்பட்டுள்ள அந்த துணிக்கடை சென்னை தி நகரில் இயங்கி வருகிறது. துணிக்கடையே நடத்தி வரும் சினேகா ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியமாட்டாராம்.
சினேகாவின் பாலிசி
அவரின் இந்த கொள்கைக்கு பின்னணியில் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கிறது. அதன்படி, சினேகா ஒரு முறை தொடர்ந்து ஒரே டிரஸ் அணிந்து வந்ததை பார்த்து அவர் கிட்ட வேற டிரஸ்ஸே கிடையாதா என பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள். அதனால் அன்றிலிருந்து இனி ஒருமுறை போட்ட டிரஸ்ஸை மறுபடியும் பாடக்கூடாது என முடிவெடுத்து அதை பாலோ செய்து வருகிறார். ஆடைகளை ரிப்பீட் செய்யாததால் தன்னுடைய கப்போர்டு பெரிதாகிக் கொண்டே செல்வதாக சினேகா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் சில ஆடைகளை தன்னுடைய தோழிகளுக்கு கொடுத்து விடுவாராம்.
இதையும் படியுங்கள்... மகாலட்சுமி முன்... மங்கள லட்சுமியாக நின்று போஸ் கொடுத்த சினேகா!