MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Sai Pallavi Marriage : காட்டுத்தீ போல் பரவிய திருமண செய்தி... வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த சாய் பல்லவி

Sai Pallavi Marriage : காட்டுத்தீ போல் பரவிய திருமண செய்தி... வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த சாய் பல்லவி

Sai Pallavi Marriage : புதிதாக பட வாய்ப்புகள் வந்தாலும் அவர் ஏற்காமல் இருந்து வந்தார் சாய் பல்லவி. இதன் காரணமாக அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவியது.

1 Min read
Author : Ganesh A
Published : May 03 2022, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனதால் அவருக்கு அடுத்தடுத்து பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் இவர் நடித்த மாரி 2, என்.ஜி.கே., தியா ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இதையடுத்து தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவிக்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்ததால், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். இதனால் பிறமொழி படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி.

34

தற்போது இவர் கைவசம் விராட பருவம் திரைப்படம் மட்டுமே உள்ளது. புதிதாக பட வாய்ப்புகள் வந்தாலும் அவர் ஏற்காமல் இருந்து வந்தார் சாய் பல்லவி. இதன் காரணமாக அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் தான் அவர் புதிய பட வாய்ப்புகளை தவிர்த்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

44

இந்நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் சாய் பல்லவி. அவர் கூறியதாவது : “திருமணம் குறித்து பரவும் தகவல் உண்மையில்லை. நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருப்பதனால் அதிக படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. சாய் பல்லவி நடித்தால் நல்ல படமாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். அதனால் தான் கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன்” என அவர் கூறியுள்ளார். இதன்மூலம் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சாய் பல்லவி.

இதையும் படியுங்கள்... Vaadivaasal:வாடிவாசலுக்கு வந்த புது சிக்கல்! வெற்றிமாறனை வெயிட் பண்ண சொல்லிட்டு புது கூட்டணியில் இணைந்த சூர்யா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சாய் பல்லவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay : திரிஷாவுக்கு நன்றி... ரஜினிக்கு திட்டு - விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காததால் கிளம்பிய சர்ச்சை..!.
Recommended image2
Siragadikka Aasai : ஜோதிடர் பேச்சை கேட்டு பெயரை மாற்றிய மனோஜ்... புது பிரச்சனையில் சிக்கிய ரேகா - சத்யா
Recommended image3
Priyanka Deshpande : நான் அம்மாவாக போறேன்... கணவருடன் சேர்ந்து விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved