- Home
- Cinema
- Vaadivaasal:வாடிவாசலுக்கு வந்த புது சிக்கல்! வெற்றிமாறனை வெயிட் பண்ண சொல்லிட்டு புது கூட்டணியில் இணைந்த சூர்யா
Vaadivaasal:வாடிவாசலுக்கு வந்த புது சிக்கல்! வெற்றிமாறனை வெயிட் பண்ண சொல்லிட்டு புது கூட்டணியில் இணைந்த சூர்யா
Vaadivaasal : விடுதலை படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பிசியானதன் காரணமாக, வாடிவாசல் படத்தின் முதற்கட்ட பணிகள் முடங்கி உள்ளதாம். இதனால் அப்படத்தின் ஷுட்டிங்கும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா - பாலா
நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், த்ற்போது பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மீனவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சூர்யா - வெற்றிமாறன்
இதையடுத்து வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் சூர்யா. வெற்றிமாறன் இயக்க உள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. இதற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பிரத்யேக பயிற்சியும் மேற்கொண்டு வந்தார் சூர்யா.
இந்நிலையில், வாடிவாசல் படத்துக்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் விடுதலை படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பிசியானதன் காரணமாக, வாடிவாசல் படத்தின் முதற்கட்ட பணிகள் முடங்கி உள்ளதாம். இதனால் அப்படத்தின் ஷுட்டிங்கும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா - ஞானவேல்
வாடிவாசல் படம் தள்ளிப்போவதால், அதற்கு முன் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் குறுகிய கால தயாரிப்பில் உருவாகும் படமொன்றில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படத்தை 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Dhanush : தனுஷை முதலமைச்சர் ஆக்கத் துடிக்கும் பிரபலம்... அரசியலுக்கு ஓகே சொல்வாரா அசுரன்?