- Home
- Cinema
- கொலை பட பிரஸ் மீட்டில் கொழு கொழுவென பப்ளி பேபியாக வந்த ரித்திகா சிங்... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்
கொலை பட பிரஸ் மீட்டில் கொழு கொழுவென பப்ளி பேபியாக வந்த ரித்திகா சிங்... வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்
Ritika Singh : விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் கொலை படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நடிகை ரித்திகாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நடிகை ரித்திகா சிங், கடந்த 2016-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நிஜத்தில் பாக்ஸிங் வீராங்கனையான இவர், இப்படத்திலும் அதே கேரக்டரில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
இறுதிச் சுற்று படத்தில் ரித்திகா சிங்கின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அவரது நடிப்புக்கு அங்கீகாரமாய் தேசிய விருதும் கிடைத்தது. முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற இவர், அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.
இதையும் படியுங்கள்... ரஜினிகாந்த் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்த மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்! வைரலாகும் வீடியோ..!
இதன்பின்னர் அரவிந்த் சாமியின் வணங்காமுடி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ரித்திகா. இப்படம் பல வருடங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டாலும், சில பிரச்சனைகள் காரணமாக இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.
இதையடுத்து அவர் நடித்த படம் தான் ஓ மை கடவுளே, அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு காதலர் தினத்தன்று ரிலீசான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் அனு என்கிற கதாபாத்திரத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரித்திகா.
இப்படத்தில் அவரை நாயகன் அசோக் செல்வன் நூடுல்ஸ் மண்ட என்று கேலி செய்வார். அந்த பெயர் பாப்புலர் ஆனதால், இவரை நெட்டிசன்களும் செல்லமாக நூடுல்ஸ் மண்ட என்றே நாளடைவில் அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்த ‘விருமன்’... அதுவும் ஒரே நாளில் இத்தனை கோடியா..!
நடிகை ரித்திகா நடிப்பில் தற்போது கொலை என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. விடியும் முன் படத்தின் இயக்குனர் பாலாஜி கே குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரித்திகா. இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட ரித்திகா சைடு கேப்பில் போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி உள்ளார். கொழு கொழுவென பப்ளி பேபியாக காட்சியளிக்கும் ரித்திகா, விதவிதமாக போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... உதயநிதி வெளியிட்ட முதல் இந்தி படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா! பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய ‘லால் சிங் சத்தா’