46 வயதிலும் இளசுகளை வசீகரிக்கும் ரம்பா..அழகிய லைலாவின் பர்த்டே ஸ்பெசல்!
நடிகை ரம்பா தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

actress rambha
அழகிய லைலாவாக இளசுகளின் இதயத்தில் குடியிருந்த தொடையழகி ரம்பா 90களில் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
actress rambha
திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரம்பாவின் பிறந்தநாள் ஜூன் 5ஆம் தேதி நேற்று கொண்டாடப்பட்டது. கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் கேக் வெட்டி ரம்பா பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரம்பாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
actress rambha
ரம்பாவின் பிறந்தநாள் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’46 வயதிலும் ரம்பா எப்படி அழகாக இருக்கிறார் பாருங்கள்’ போன்ற கமெண்ட்ஸ்கள் அதிகம் பதிவிட்டு வருகின்றனர்.. இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
actress rambha
நடிகை ரம்பா இறுதியாக கடந்த 2011 -மாண்டு மலையாளத்தில் ஃபிலிம்ஸ்டார் என்நும் படத்தில் நடித்திருந்தார். சஞ்சீவ் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இதில் திலீப் மற்றும் கலாபவன் மணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன்பிறகு சொந்த காரணங்களால் சென்னையில் வசித்து வந்த ரம்பா கனடாவிற்கே குடி பெயர்ந்து விட்டார்.