Radhika Sarathkumar : இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சாதனை விருது பெற்று கெத்து காட்டிய ராதிகா
Radhika Sarathkumar : தமிழ் ஸ்டடிஸ் யூகே என்கிற அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாட்டின் எம்.பி மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா, தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். பாராதிராஜாவால் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராதிகா, முதல் இன்னிங்ஸில் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கி வரும் ராதிகா, விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் சக்சஸ்புல் நடிகையாக வலம் வந்த ராதிகா, தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தமிழ் ஸ்டடிஸ் யூகே என்கிற அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாட்டின் எம்.பி மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில் நடிகை ராதிகாவுக்கும் விருது வழங்கப்பட்டு உள்ளது.
விருது பெற்றபோது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ள ராதிகா, இங்கிலாந்து பார்லிமெண்டில் இந்த விருதைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம் என நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... vanitha vijayakumar : வாவ்... இப்ப இதுவேறயா! புது பிசினஸ் தொடங்கிய வனிதா - குவியும் வாழ்த்துக்கள்