vanitha vijayakumar : வாவ்... இப்ப இதுவேறயா! புது பிசினஸ் தொடங்கிய வனிதா - குவியும் வாழ்த்துக்கள்

vanitha vijayakumar : நடிப்பை தவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் வனிதா, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் கடந்தாண்டு தொடங்கினார்.

Actress and biggboss fame vanitha vijayakumar started new business

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட வனிதா, 3 பிள்ளைகளுக்கு தாயானார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவரது இரண்டு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தன.

தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 2 மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். இதன்பின்னர் கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்தார் வனிதா.

Actress and biggboss fame vanitha vijayakumar started new business

இந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்ததால், பின்னர் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார் வனிதா. இவர் நடிப்பில் தற்போது 2கே காதல், காத்து, அநீதி, அந்தகன், ரஜினி, பிக்கப் டிராப் என டஜன் கணக்கிலான படங்களில் நடித்து வருகிறார் வனிதா. இதுதவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் வனிதா, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் கடந்தாண்டு தொடங்கினார்.

இவ்வாறு நடிப்பை தவிர்த்து பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வரும் வனிதா, தற்போது ஃபேஷன் டிசைனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஃபேஷன் ஷோவில் தான் சிகைஅலங்காரம் செய்த பெண்ணுடன் ஒய்யார நடைபோட்டு, தனது புது பிசினஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள வனிதா, விரைவில் தனது பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஷகிலா மகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது... வெளியான ஷாக்கிங் புகைப்படம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios