ஷகிலா மகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது... வெளியான ஷாக்கிங் புகைப்படம்
Baakiyalakshmi : குமுளியில் நடைபெற உள்ள ஷூட்டிங்கிற்காக ஷகிலா மகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது.
நடிகை ஷகிலாவுக்கு, மிளா என்கிற மகள் உள்ளார். திருநங்கையான இவரை ஷகிலா தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஆடை வடிவமைப்பாளராக உள்ள மிளா சில சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதில் நமீதா மாரிமுத்து பங்கேற்றதால், மிளாவால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
மிளாவுக்கு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் நண்பர்களாக உள்ளனர். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகளான திவ்யா கணேஷும், கம்பம் மீனாவும் மிளாவின் நெருங்கிய தோழிகள் ஆவர். இவர்கள் மூவரும் அடிக்கடி ஜாலியாக வெளியே சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதன்படி குமுளியில் நடைபெற உள்ள ஷூட்டிங்கிற்காக ஒன்றாக காரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இவர் சென்ற காரின் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரின் பின்பகுதி மட்டும் சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
விபத்து குறித்து மிளா கூறியதாவது : “எங்கள் காரின் பின்னால் வந்த காரின் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் எங்கள் காரின் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. எனக்கு மட்டும் முதுகில் லேசான அடி மற்றபடி நான் நலமுடன் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்.... தசாவதாரம் கமலுக்கே டஃப் கொடுக்கும் சியான்... விக்ரமின் மாஸான கெட்-அப்களுடன் வெளிவந்த ‘கோப்ரா’ பட பாடல்