துளியும் மேக்கப் இல்லாமல்... வெள்ளை கவுனில் விதவிதமாக போஸ் கொடுத்த நயன்தாரா! வைரலாகும் ஹனி மூன் போட்டோஸ்!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு நயன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆன பிறகும் நேரம் கிடைக்கும்போதெல்லாம்... வெளிநாடுகளுக்கு சென்று நயன் - விக்கி ஜோடி ஹனி மூன் கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே திருமணம் ஆன கையேடு, தாய்லாந்துக்கு சென்று தங்களின் முதல் ஹனி மூன் நாட்களை கழிந்த இந்த ஜோடி, தற்போது இரண்டாவது ஹனி மூனுக்கு ஸ்பெயின் சென்றுள்ளது.
நேற்றைய தினம் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை, கூட ஸ்பெயின் நாட்டில் கையில் தேசிய கொடியை பிடித்தபடி, நயன் - விக்கி ஜோடி கொண்டாடியது. இவர்களது சுதந்திர தின கொண்டாட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
மேலும் செய்திகள்: 'சீதா ராமம்' பட நடிகை மிருணாள் தாக்கூரின்... டாப் லெஸ் மற்றும் பிகினி ஹாட் போட்டோஸ்!
இதை தொடர்ந்து நயன் நெற்றியில் காதல் பொங்க... பொங்க... விக்கி நச் என முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்றும் வெளியான நிலையில், வைரலாக பார்க்கப்பட்டது.
திருமணத்திற்கு பிறகும் சுதந்திர காதல் பறவையாக சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா வெள்ளை நிற குட்டை கவுனில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது.
விதவிதமாக இதில் அவர் போஸ் கொடுத்துள்ளார். எப்போதும் விக்கியுடன் போஸ் கொடுக்கும் நயன் இதில் சிங்கிளாக நின்று, துளியும் மேக்கப் போடாமல் இருக்கிறார். சற்றுமுன் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: நைட் பார்ட்டியில் ரோபோ ஷங்கருடன் செம்ம ஆட்டம் போட்ட வனிதா விஜயகுமார்... வைரல் போட்டோஸ்..!