- Home
- Cinema
- டூ பீஸில் டூ மச் கிளாமர்... ‘சொப்பன சுந்தரி’ மனிஷா யாதவ்வின் சொக்க வைக்கும் பிகினி போட்டோஸ் இதோ
டூ பீஸில் டூ மச் கிளாமர்... ‘சொப்பன சுந்தரி’ மனிஷா யாதவ்வின் சொக்க வைக்கும் பிகினி போட்டோஸ் இதோ
இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மனிஷா யாதவ், அங்குள்ள கடற்கரையில் எடுத்த பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்தவர் மனிஷா யாதவ். மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து தெலுங்கில் தில் ராஜு தயாரித்த டுனேகா டுனேகா என்கிற படத்தில் நடித்தார்.
பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்த மனிஷா யாதவ், சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்தார். இப்படத்தில் மிகவும் அழுத்தமான வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய மனிஷா யாதவ்வுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அடுத்ததாக ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக த்ரிஷா இல்லேனா நயன்தாரா படத்தில் நடித்தார்.
இதையும் படியுங்கள்... Divyabharathi: ஜிமிக்கி கம்மலுடன்... பாவாடை தாவணியில் பளீச் அழகை காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் திவ்யபாரதி!
இப்படத்தின் மூலம் கிளாமர் ஹீரோயினாகவும் அவதாரம் எடுத்த மனிஷா யாதவ்வுக்கு, இயக்குனர் வெங்கட் பிரபு, தான் இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்கிற பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆட வைத்தார். இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதால், இவரை ரசிகர்கள் சொப்பன சுந்தரி என்றே செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.
இவ்வாறு தொடர்ந்து பல்வேறு விதமான வேடங்களில் நடித்தாலும், இவருக்கென எதிர்பார்த்த அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. தற்போது இவர் கைவசமும் ஒரு படம் கூட இல்லை. சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஆனால் அதெல்லாம் புறந்தள்ளிவிட்டு தற்போது மனிஷா யாதவ் ஜாலியாக டூ பீஸ் உடையில் வலம் வந்துகொண்டிருக்கிறார். இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்குள்ள கடற்கரையில் எடுத்த பிகினி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதற்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து வெளியாகும் வாரிசு பட ஸ்டில்ஸ்... ரசிகர்களை மெர்சலாக்கிய விஜய்யின் மாஸ் லுக் போட்டோஸ் இதோ