பேபி பிங்க் நிற சேலையில்... புன்னகையால் இளம் நெஞ்சங்களை கட்டி இழுக்கும் மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனன் தற்போது பேபி பிங்க் நிற சேலையில், பார்த்தாலே பரவசமாக்கும் அழகில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகைகள் லிஸ்டில், மிகவும் குறுகிய நாட்களிலேயே இணைந்தவர் மாளவிகா மோகனன். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடி போட்டார் மாளவிகா, இந்த வாய்ப்பு தான் இவரை முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பெற செய்தது.
தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் மாளவிகா, தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் முக்கிய இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார்.
ஏகே 62 படத்தின் இசையமைப்பாளர் இவரா? பக்கா பிளான் போட்டு மகிழ் திருமேனி தேர்வு செய்தது யாரை தெரியுமா!
மேலும் பாலிவுட் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வரும் மாளவிகா... அடிக்கடி தன்னுடைய ரசிகர்களை கவரும் விதமாக, விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில்... தன்னுடைய துள்ளலான அழகில் பேபி பிங்க் நிற சேலை அணிந்து... கவர்த்திழுக்கும் புன்னகையோடு வெளியிட்டுள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.