MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அன்று பிழைப்புக்காக கழிவறையை சுத்தம் செய்த பிரபல நடிகை.. ஆனா இன்று அவரின் சொத்து மதிப்பு ரூ.58 கோடி..!

அன்று பிழைப்புக்காக கழிவறையை சுத்தம் செய்த பிரபல நடிகை.. ஆனா இன்று அவரின் சொத்து மதிப்பு ரூ.58 கோடி..!

தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் அந்த நடிகை பணக்கார பாகிஸ்தானிய நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.

2 Min read
Ramya s
Published : Oct 23 2023, 10:39 AM IST| Updated : Oct 23 2023, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஸிந்தா, தீபிகா படுகோனே, அனுஷ்கா ஷர்மா என பல நடிகைகள் பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானுடன் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டின் நட்சத்திரங்களாக மாறினர். அந்த வகையில் ஷாருக்கானுடன் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை ஒருவர், 17 வயதில் தனது பிழைப்புக்காக கழிவறைகளை சுத்தம் செய்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.. ஆனால்  தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் அந்த நடிகை பணக்கார பாகிஸ்தானிய நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.

29

சமீபத்தில் 2-வது திருமணம் செய்த அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. பாகிஸ்தானில் மட்டுமின்றி இந்தியாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் வேறு யாருமல்ல பிரபல நடிகை மஹிரா கான் தான்.

39

மஹிரா கான் 2006 இல் VJயாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் பிரபல பாகிஸ்தானிய இயக்குனர் ஷோயப் மன்சூர் இயக்கிய Bol என்றதிரைப்படத்தில் நடித்தது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.. ஹம்சஃபர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அவர் மேலும் பிரபலமடைந்தார்.

49
Mahira khan

Mahira khan

பின்னர், 2017 இல், ரயீஸ் படத்தில் ஷாருக்கானுடன் பாலிவுட்டில் அறிமுகமானார். ராகுல் தோலாகியா இயக்கிய இந்த படம் அவரது பெரிய பாலிவுட் அறிமுகத்தைக் குறித்தது, மேலும் திரைப்படத்தில் ஷாருக்கான் உடனான அவரது கெமிஸ்ட்ரி பார்வையாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் உலகம் முழுவதும் ரூ 281.45 கோடி வசூலித்தது.

59
Mahira khan

Mahira khan

மஹிரா கான் தனது படிப்பிற்காக 17 வயதில் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது, மேலும் நடிகை கழிவறைகளை சுத்தம் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு உள்ளூர் கடையில் காசாளராக வேலைக்கு சேர்ந்தார். 2021 ஆம் ஆண்டில், நடிகை ஃபுஷியா இதழுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை சொன்னார்.

69


மேலும் பேசிய அவர் “நான் வாழ்க்கையில் கடினமான நேரங்களையும் பார்த்திருக்கிறேன் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். நான் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த காலத்தில் தரையை துடைத்தேன் கழிவறைகளை சுத்தம் செய்துள்ளேன். இது எளிதான பயணம் அல்ல, ஆனால் இது ஒரு பெரிய விஷயம்.” என்று தெரிவித்தார்

 

 

 

79

பாகிஸ்தானின் பணக்கார நடிகை, பாகிஸ்தானில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மஹிரா கான் இருக்கிறார். அவர் ஒரு படத்திற்கு ரூ. 3 முதல் 5 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகவும், அவரின் மொத்த சொத்து மதிப்பு 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 58 கோடி) இருப்பதாகவும் கூறப்படுகிறது.

89
Mahira khan

Mahira khan

Jo Bachay Hain Sang Samait Lo என்ற பாகிஸ்தானின் முதல் நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் தொடரில் ஃபவாத் கானுடன் மஹிரா கான் ஜோடியாக நடிக்கிறார். இது ஃபர்ஹத் இஷ்தியாக்கின் 2013 ஆம் ஆண்டு அதிகம் விற்பனையாகும் உருது மொழி நாவலின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். அஹத் ரஸா மிர், ஹம்ஸா அலி அப்பாஸி, பிலால் அஷ்ரஃப், மாயா அலி, இக்ரா அஜீஸ், ஹனியா அமீர், குஷால் கான், நதியா ஜமீல், ஒமெய்ர் ரனா மற்றும் சமினா அஹ்மத் உள்ளிட்ட பலர் இந்த தொடரில் நடித்துள்ளனர்

99

மஹிரா கான் 2007 இல் அலி அஸ்காரி என்பவரை திருமணம் செய்து கொண்டார், ஆனால் 2015 இல் இருவரும் பிரிந்தனர். அவர்களுக்கு அஸ்லான் என்ற மகன் பிறந்தார். சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மஹிரா கான் மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தற்போது தொழிலதிபர் சலீம் கரீமை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பாலிவுட்
ஷாருக் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
Recommended image2
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
Recommended image3
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved