20 பொண்ணு மாதிரி இருக்கும் நடிகை குஷ்பு..!! விட்டா நயன்தாராவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..?
நடிகை குஷ்பு சும்மா 20 வயசு பொண்ணு போல் மாறி, யங் லுக்கில்... நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஸ் தற்போது சோசியல் மடியாவில் படு வைரலாக பார்க்கப்பட்டு, கமெண்டுகள் தெறித்து வருகிறது.
ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர். அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
டி.வி. நிகழ்ச்சிகள், சினிமா, அரசியல் என படுபிசியாக இருந்தாலும் குஷ்பு பொறுப்பான குடும்பத் தலைவியாக தனது கடமைகளை தவறியதே கிடையாது. சோசியல் மீடியாவில் கூட கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா, அனந்திதா பற்றிய அப்டேடுகளையும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் ரஜினிக்கு குஷ்பு தான் ஜோடி என்றும், இல்லை வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் படு ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள குஷ்பு தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் விதமாக, 20 வயது பெண் போல், பளீச் அழகில் மின்னுகிறார்.
இவரது இந்த புதிய தோற்றத்தை பார்த்து, நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலர், உங்களின் அழகின் ரகசியம் என்ன ? என்பது போன்ற கேள்விகளை சமூக வலைத்தளத்தில் முன் வைத்து வருகிறார்கள்.
நீங்களே பாருங்க... நடிகை குஷ்புவுக்கு இவ்வளவு பெரிய பொண்ணுன்னு சொன்ன நம்புற மாதிரியா இருக்கு? அந்த அளவுக்கு வந்துள்ளது மாற்றம்.