பாலிவுட் நடிகைக்கு நோ சொல்லிவிட்டு... தன்னைவிட 20 வயது குறைவான நடிகையுடன் ஜோடி சேர ஆசைப்படும் எஸ்.கே
sivakarthikeyan : மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் திரையுலகில் அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக வசூல் ஈட்டிய படங்களை கொடுத்தவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தன.
தற்போது இவர் நடிப்பில் பிரின்ஸ் படம் தயாராகி உள்ளது. இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... Rolex ரேஞ்சுக்கு சூர்யாவுக்கு ஒரு ரோல்... ராக்கெட்ரி மூலம் மாதவன் சாதித்தாரா? சோதித்தாரா? - முழு விமர்சனம் இதோ
இதையடுத்து மாவீரன் படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்... ஹரியின் கமர்ஷியல் மேஜிக் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?.. அருண்விஜய்யின் யானை படம் எப்படி இருக்கு?- முழு விமர்சனம்
இதுதவிர மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிவகார்த்திகேயன், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தையும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... Radha Ravi : தமன்னாவை சுத்தி சுத்தி பார்த்து சர்ச்சையில் சிக்கிய ராதா ரவி
ஏற்கனவே பாலா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி தற்போது சிவகார்த்திகேயனுக்கும் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் கீர்த்தி ஷெட்டிக்கு 18 வயது தான் ஆகிறது. இவர் கடந்தாண்டு தெலுங்கில் வெளியான உப்பென்னா படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.