Radha Ravi : தமன்னாவை சுத்தி சுத்தி பார்த்து சர்ச்சையில் சிக்கிய ராதா ரவி

Radha Ravi : கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை நயன்தாரா குறித்து ராதா ரவி இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கி இருந்த நிலையில், தற்போது நடிகை தமன்னா குறித்து பேசி உள்ள பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

Actor Radha Ravi controversial Speech about Actress Tamannah Bhatia in Kanal movie audio launch

சமய முரளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராதா ரவி கலந்துகொண்டார். அப்போது இவர் நடிகை தமன்னா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஹரியின் கமர்ஷியல் மேஜிக் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?.. அருண்விஜய்யின் யானை படம் எப்படி இருக்கு?- முழு விமர்சனம்

அதில் அவர் பேசியதாவது : “நடிகை தமன்னாவை சுற்றி சுற்றி பார்த்தேன் அவர் உடம்பில் ஒரு இடத்தில் கூட கறுப்பு இல்லை. அதேபோல் தான் கனல் பட ஹீரோயின் காவ்யாவும், தமன்னாவை போலவே நல்ல கலரு. நல்லா நடிச்சிருக்கா என பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சு தான் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... Pathu Thala : சிம்பு கேங்ஸ்டராக நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Actor Radha Ravi controversial Speech about Actress Tamannah Bhatia in Kanal movie audio launch

அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்களும் எழுந்து வருகின்றன. இவர் ஏற்கனவே நடிகை நயன்தாரா குறித்து இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கி இருந்த நிலையில், தற்போது நடிகை தமன்னா குறித்து பேசி உள்ள பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாடகி சின்மயியும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... 2022-ன் முதல் பாதி ஓவர்! விஜய், அஜித் சொதப்பினாலும் தமிழ் சினிமாவில் வசூலை வாரிக்குவித்த படங்களின் லிஸ்ட் இதோ

நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை என்கிற படத்தில் நடித்தார். அப்போது இயக்குனர் சுராஜ், நடிகைகள் என்றாலே கிளாமருக்கு மட்டும் தான் என்கிற தொனியில் பேசி இருந்தார். இதற்கு நடிகை தமன்னா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதேபோல் தற்போது அவர் ராதா ரவியின் பேச்சுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios