MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடிக்கும் அசோக் செல்வன்! அடுத்த மாதம் டும் டும் டும்.. திருமண தேதி வெளியானது!

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடிக்கும் அசோக் செல்வன்! அடுத்த மாதம் டும் டும் டும்.. திருமண தேதி வெளியானது!

பிரபல நடிகர் அசோக் செல்வனுக்கும் இளம் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் அடுத்த மாதம் நெல்லையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 12 2023, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் அனைத்து நடிகர்களுமே, நிலையான இடத்தை பிடித்து விடுவது இல்லை. அந்த வகையில், ஆரம்பத்தில் பல போராட்டங்களை கடந்து, தோல்விகளையும், வலிகளையும் கடந்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளவர் இளம் நடிகர் அசோக் செல்வன்.  இவருக்கும், பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனுக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

25

அசோக் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான 'சூது கவ்வும்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.  இதை தொடர்ந்து  'பீட்சா 2 வில்லா', தெகிடி, சவாலே சமாளி, 144, மன்மத லீலை, ஹாஸ்டல், கூட்டத்தில் ஒருவன், ஓ  மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில், போன்ற பல படங்களில் நடித்தார்.

Sathyaraj Mother Death: சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு அஞ்சலி!

35

குறிப்பாக ஓ மை கடவுளே படத்தின் வெற்றிக்கு பிறகு, திரைக்கதையை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார். அப்படி இவர் தேர்வு செய்து நடித்த போர் தொழில் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்  சபா நாயகன் என்கிற படமும் இவரின் கைவசம் உள்ளது.

45

திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அசோக் செல்வனுக்கும், பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகளும், இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் செப்டம்பர் 13 ஆம் தேதி, நெல்லையில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

ரம்யா பாண்டியன் தங்கையோடு நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணமா? சமூக வலைத்தளத்தில் சூடாக்கிய தகவல்!

55

ஆனால் இந்த திருமணம் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணமா என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்டுகிறது.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image2
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Recommended image3
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved