MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பல அவமானங்களை கடந்து தடம் பதித்து வரும் நடிகை கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பல அவமானங்களை கடந்து தடம் பதித்து வரும் நடிகை கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகை கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
| Updated : Dec 26 2023, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் 3-வது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவர் பிப்ரவரி 18, 1992 அன்று சென்னையில் பிறந்தார். கவிதா பாண்டியன் மற்றும் கிரணா பாண்டியன் என்ற 2 சகோதரிகள் உள்ளனர். சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் பள்ளி படிப்பை முடித்த அவர், அங்கேயே பட்டப்படிப்பையும் முடித்தார்.

27

பட்டம் பெற்ற பிறகு, கீர்த்தி பாண்டியன் பாலே மற்றும் சால்சா நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் 2015 அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்துள்ளது. தனது தந்தைக்கு சொந்தமான திரைப்பட விநியோக நிறுவனமான A&P குரூப்ஸின் தலைமை இயக்குனராக கீர்த்தி பாண்டியன் இருந்தார். எனினும் தனது நிறம் மற்றும் எடை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் திரைத்துறையில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

10 வருசத்துக்கு முன்னாடி.. அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் இப்படியொரு லவ் ஸ்டோரி இருக்கா..
 

37
keerthi pandian

keerthi pandian

ஆனால் அதே நேரம் தனக்கு முக்கியத்துவம் இல்லாத சிறிய கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் கீர்த்தி அதை நிராகரித்தார். ஆடிஷன் நடக்கும் போது பிரபல நடிகரின் மகள் என்பதால், வாரிசு நடிகை என்ற விமர்சனம் எழக்கூடாது என்பதற்காக தனது கீர்த்தி என்ற பெயரை சொல்லியே தன்னை அறிமுகம் செய்து கொள்வார். ஒருமுறை கீர்த்தி பாண்டியன் அளித்த பேட்டியில் தனது கலர், தோற்றம் காரணமாக பல இயக்குனர்கள் தன்னை நிராகரித்ததாகவும், ஒருக்கட்டத்தில் தனது நம்பிக்கையே உடைந்துவிட்டதாகவும் வேதனையும் தெரிவித்திருந்தார். 

47
keerthi pandian

keerthi pandian

2019 ஆம் ஆண்டு தும்பா என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். ஹரிஷ் ராம் இயக்கிய இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தார். எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

57
keerthi pandian

keerthi pandian

பின்னர் ஹெலன் என்ற மலையாள படத்தின் ரீமேக்காக உருவான அன்பிர்கிணியாள் படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பலதரப்பினரால் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருதை கீர்த்தி பாண்டியன் வென்றார். 

ரூ.100 கோடி மதிப்புள்ள ஆடம்பர வீடு முதல் பிரைவேட் ஜெட் வரை.. நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
 

67

மேலும் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியான போஸ்ட்மேன் என்ற மினி சிரீஸில் நடித்தார். அவர் தற்போது கொஞ்சம் பேசினால் என்ன, கண்ணகி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த போது நடிகர் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

77

இதை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த 13-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம், திருமணத்திற்கு பிந்தைய போட்டோஷூட் என பல புகைப்படங்களை இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 10 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவரின் சொத்துக்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay: 20 ஆண்டுகளுக்கு முன்பே விஜய்க்கு அரசியலில் குதிக்க தயாராகிவிட்டார்.! பிரபல இயக்குனர் சொன்ன உண்மை.!
Recommended image2
ஜனனியை காப்பாற்றிய ஆலிவர் தேவசகாயம் யார்? எதிர்நீச்சல் சீரியலில் காத்திருக்கும் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Music: மொத்தம் பத்து.! அத்தனையும் கெத்து.! எக்காலத்திற்கும் ஏற்ற 10 எஸ்.பி.பி பாடல்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved