- Home
- Cinema
- Ileana : தாராள கவர்ச்சியில் தாறுமாறு போஸ்... தீயாய் பரவும் நடிகை இலியானாவின் ஹாட் போட்டோஸ்
Ileana : தாராள கவர்ச்சியில் தாறுமாறு போஸ்... தீயாய் பரவும் நடிகை இலியானாவின் ஹாட் போட்டோஸ்
Ileana : படு கவர்ச்சியான மாடர்ன் கவுனில் கிளாமராக போஸ் கொடுத்து நடிகை இலியானா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தெலுங்கில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'தேவதாசு' என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. இதை தொடர்ந்து அதே ஆண்டில் தமிழில் வெளியான 'கேடி' படத்தில் நடித்து தமிழிலும் எண்ட்ரி கொடுத்தார்.
இவருக்கு தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றிகள் கிடைத்தது போல், தமிழில் கிடைக்காததால் டோலிவுட்டிலே தஞ்சம் அடைந்தார். தெலுங்கில் அடுத்தடுத்து பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்
கேடி படத்துக்கு பின்னர் தமிழ் படங்களில் தலைகாட்டாமல் இருந்து வந்த இவரை, நண்பன் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க வைத்தார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் இலியானா. கோலிவுட், டோலிவுட் படங்களின் மூலம் கிடைத்த மவுசு காரணமாக இவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்ப்பும் வந்து குவிந்தது.
இந்தியில் இவர் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்ததன் காரணமாக, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு போன்ற பிறமொழிப் பட வாய்ப்புகளை ஏற்காமல் முழுநேரமாக பாலிவுட்டில் தஞ்சம் அடைந்தார்.
பாலிவுட்டில் பாப்புலர் ஆனதும் ஓவர் கவர்ச்சியில் அலப்பறை செய்து வந்த நடிகை இலியானா... அவ்வப்போது பிகினி உடையிலும் ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுப்பது உண்டு.
இந்நிலையில், தற்போது படு கவர்ச்சியான மாடர்ன் கவுனில் கிளாமராக போஸ் கொடுத்து நடிகை இலியானா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Shah rukh Khan : காத்திருந்த அட்லீ... கால்ஷீட் கொடுத்த ஷாருக்கான் - மீண்டும் தொடங்கியது ‘லயன்’ ஷூட்டிங்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.