Shah rukh Khan : இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான், அடுத்ததாக நடிக்கும் படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகிறார் அட்லீ.

ஆர்யா, நயன்தாரா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடிய அட்லீக்கு, தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார் நடிகர் விஜய். இதையடுத்து இவர்கள் கூட்டணியில் தெறி திரைப்படம் உருவானது. 

சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, சுனைனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்த அட்லீ மெர்சல் படத்தை இயக்கி வெற்றிகண்டார். பின்னர் பிகில் படம் மூலம் விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த அட்லீ, ஹாட்ரிக் வெற்றியையும் ருசித்தார்.

இதையடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உயர்ந்த அட்லீக்கு, பாலிவுட் பட வாய்ப்பு தேடி வந்தது. இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான், அடுத்ததாக நடிக்கும் படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகிறார் அட்லீ. இப்படத்திற்கு லயன் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்தாண்டு இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. நீண்ட நாட்களாகியும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்ததால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கி உள்ளார் அட்லீ. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஷாருக்கான் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படங்கள் லீக்காகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்.... https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-allu-arjun-fined-by-hyderabad-police-ra0k5b