- Home
- Cinema
- Allu Arjun : போலீசில் சிக்கிய புஷ்பா... விதிமீறிய அல்லு அர்ஜுனை நடுரோட்டில் நிறுத்தி அபராதம் விதித்த போலீசார்
Allu Arjun : போலீசில் சிக்கிய புஷ்பா... விதிமீறிய அல்லு அர்ஜுனை நடுரோட்டில் நிறுத்தி அபராதம் விதித்த போலீசார்
Allu Arjun : டோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், விதிமீறலில் ஈடுபட்டதற்காக போலீசார் அபராதம் விதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. பான் இந்தியா படமாக வெளியான் இப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இதையடுத்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அல்லு அர்ஜுன்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் விதிமீறலில் ஈடுபட்டதற்காக போலீசார் அபராதம் விதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றிற்கு தனது சொகுசு காரில் சென்றுள்ளார். பொதுவாக பிரபலங்கள், ரசிகர்களின் அன்புத்தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக தங்களது கார்களில் கருப்பு நிற பிலிம்களை ஒட்டி வைத்திருப்பர்.
ஆனால் இந்தியாவில் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து கார் கண்ணாடிகளில் கருப்பு நிற பிலிம் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனை மீறு ஒட்டுவோருக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், தனது காரில் கருப்பு பிலிம் ஒட்டி இருந்ததன் காரணமாக அவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவரிடம் ரூ.700 அபராதமாக வசூலிக்கப்பட்டதாம். இதற்காக போலீசிடம் எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அபராதத் தொகையை செலுத்திவிட்டு சென்றாராம் அல்லு அர்ஜுன்.
இதையும் படியுங்கள்... Taanakkaran Review : ‘டாணாக்காரன்’ விக்ரம் பிரபுவுக்கு கைகொடுத்ததா? கவிழ்த்துவிட்டதா? - முழு விமர்சனம் இதோ