Hansika Motwani: ஹன்சிகாவுக்கு என்ன ஆச்சு..? எலும்பும்... தோலுமாய் மாறி அதிர வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
நடிகை ஹன்சிகாவின் ரீசென்ட் புகைப்படங்கள் அவரது கொழு கொழு அழகை ரசித்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் உள்ளது. எலும்பும் தோலுமாக அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, தன்னுடைய கொழு கொழு அழகால் ரசிகர்களை முதல் படத்திலேயே கவர்த்திழுத்தவர்.
பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர், 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் ஜோடியாக "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.
ஸ்லிம் பிட் நடிகைகளை விட, ஹன்சிகாவின் கொழு, கொழு அழகு, அவரது சிரிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரை பலரும் குட்டி குஷ்பூ செல்லமாக அழைத்த காலங்களும் உண்டு .
ஆனால் தன்னுடைய கொழு கொழு அழகால் தான் பட வாய்ப்புகள் பறிபோவதாக எண்ணி, உடை எடையை கணிசமாக குறைக்க துவங்கினார்.
ஓரளவுக்கு உடல் எடையை குறைத்தால் பரவாயில்லை... ஆனால் தற்போது ஓவராக எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.
எலும்பும் தோலுமாக மாறியுள்ள ஹன்சிகா... சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற பேன்ட் மற்றும் அதற்க்கு மேட்சிங் கோட் அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் ரசித்து வந்தாலும், சிலர் என்ன ஆனது இப்படி ஆகிடீங்க என வருத்தத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.