ஹீரோயின்களே தோத்துடுவாங்க.. ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் விதவிதமாக போஸ்! தேவதர்ஷினி மகள் நியாத்தியின் போட்டோஸ்!
தமிழில் பல படங்களில், குணச்சித்திர நடிகர்களாக நடித்துள்ள சேத்தன் - தேவதர்ஷினி நட்சத்திர தம்பதிகளில் ஒரே மகள் நியாத்தியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை தேவதர்ஷினி, படிப்பில் படு சுட்டி. கல்லூரியில் படிக்கும் போதே சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட இவருக்கு, சீரியல்களிலும் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன.
அந்த வகையில் 'கனவுகள் இலவசம்' என்கிற சீரியலில் தேவதர்ஷினி அறிமுகமானார். படித்து கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் கிடைத்தாலும் விடாப்பிடியாக தன்னுடைய , எம்.காம் படிப்பை தொலைநிலைக் கல்வியில் தொடர்ந்தார்.
என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் 'மாமன்னன்'..! வாழ்த்து கூறிய கமல்ஹாசன்..!
ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது இவருடைய கனவாக இருந்த போதும், தொடர்ந்து சீரியல் மற்றும் திரைப்படங்களில் வாய்ப்புகள் தேடி வரவே, கனவை ஓரம் கட்டிவிட்டு முழு நேர நடிகையாக மாறினார்.
தேவதர்ஷியினின் காதல் கதையும் மிகவும் சுவாரஸ்யமானது தான். அதாவது சீரியல்கள் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கிய நடிகர் சேத்தனை 'மார்மதேசம்' தொடரில் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருமே திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் சீரியலில் கவனம் செலுத்தி வந்த நிலையில்... சமீப காலமாக வெள்ளித்திரை படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு நியாத்தி கடம்பி என்கிற மகள் ஒருவரும் உள்ளார். இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக 96 படத்தில், நடிகை கௌரி கிஷனுக்கு தோழியாக நடித்திருந்தார்.
ஆற்றில் முக்காடோடு கவர்ச்சி குளியல் போடும் திவ்யா துரைசாமி! இளசுகளை ஏங்க வைத்த ஹாட் போட்டோ ஷூட்!
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், ஒரு சில படங்களில் நடிக்க நியாத்திக்கு வாய்ப்புகள் வந்த நிலையில்... அவர் படித்து கொண்டிருப்பதால், படிப்பை முடித்த பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக திரையுலகில் என்ட்ரி கொடுப்பார் என்பது போல் அவரின் பெற்றோரான சேத்தன் மற்றும் தேவதர்ஷினி தெரிவித்தனர்.
தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கால் பதிக்க பக்காவாக தயாராகியுள்ளார் நியாத்தி. அந்த வகையில் மஞ்சள் நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில், விதவிதமாக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் நியாத்தியை ஹீரோயினாக நடிக்க, அவரின் அம்மா தேவதர்ஷினி கதைகளை கேட்டு வருவதாகவும் தரமான கதைக்களம் அமைந்தால் உடனே, நியாத்தி ஹீரோயினாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.