Anushka Shetty : மீண்டும் இணையும் பாகுபலி ஜோடி... பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா?
Anushka Shetty : ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்திருந்த பிரபாஸும், அனுஷ்காவும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் ஃபிளாப் ஆனது. இப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்ததாக கூறப்ப்படுகிறது. இதையடுத்து அவர் நடிப்பில் ஆதி புருஷ் திரைப்படம் உருவாகி வருகிறது. இது ராமாயணக் கதையை மையமாக வைத்து உருவாகிறது. இதில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடிக்கிறார்.
இதன்பின்னர் மகாநடி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதுதவிர கே.ஜி.எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தையும் கைவசம் வைத்துள்ளார் பிரபாஸ். இதில் அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரபாஸ் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் மாருதி உடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை அனுஷ்காவை இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... RRR Box Office : உலகளவில் நம்பர் 1.... ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளி பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் RRR