- Home
- Cinema
- நச்சுனு லிப்லாக் கிஸ் அடித்து... புதுக் காதலனுடன் டேட்டிங்கை தொடங்கிய எமி ஜாக்சன் - வைரலாகும் போட்டோஸ்
நச்சுனு லிப்லாக் கிஸ் அடித்து... புதுக் காதலனுடன் டேட்டிங்கை தொடங்கிய எமி ஜாக்சன் - வைரலாகும் போட்டோஸ்
Amy Jackson : தமிழில் மதராசப்பட்டினம், தாண்டவம், தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்துள்ள எமி, தற்போது தனது காதலனுடன் இத்தாலி நாட்டில் ஜாலியாக் டேட்டிங் செய்து வருகிறார்.

லண்டனைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன், கடந்த 2010-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து விக்ரம் நடிப்பில் வெளியான தாண்டவம் படத்தில் நடித்த எமி ஜாகசனுக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி தனுஷுடன் தங்கமகன், விஜய் உடன் தெறி, ரஜினிகாந்த் உடன் 2.0 என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து, தமிழ் சினிமாவில் பிசியான நாயகியாக வலம் வந்தார் எமி. லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரான ஜார்ஜ் என்பவரை காதலிக்கத் தொடங்கிய பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டார் எமி. ஜார்ஜும், எமியும் லிவ்விங் டுகெதர் முறைப்படி திருமணம் செய்துகொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்தனர்.
இதையும் படியுங்கள்... ஒவ்வொரு மைனஸையும் பிளஸ் ஆக மாற்றுவார்... அதுதான் என் அண்ணன் - சூர்யாவைப் பற்றி கார்த்தி போட்ட எமோஷனல் டுவிட்
இந்த ஜோடிக்கு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு காதலனை விட்டு பிரிந்ததாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் எமி. இதன்பின்னர் அடுத்த சில மாதங்களிலேயே பிரபல நடிகரை காதலிக்க தொடங்கினார் எமி.
அவர் காஸிப் கேர்ள் என்கிற படத்தின் மூலம் பிரபலமான நடிகர் எட் வெஸ்ட்விக்கை தற்போது காதலித்து வருகிறார். இருவரும் தற்போது ஜோடியாக இத்தாலி நாட்டுக்கு டேட்டிங் சென்றுள்ளனர். அங்கு காதலனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்தபடி நடிகை எமி ஜாக்சன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விரைவில் அவர் ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு இப்படி ஒரு நிலையா? தீராத மனக்கஷ்டத்துக்கு காரணம் இந்த ஒரு படம் தான்.!