MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒவ்வொரு மைனஸையும் பிளஸ் ஆக மாற்றுவார்... அதுதான் என் அண்ணன் - சூர்யாவைப் பற்றி கார்த்தி போட்ட எமோஷனல் டுவிட்

ஒவ்வொரு மைனஸையும் பிளஸ் ஆக மாற்றுவார்... அதுதான் என் அண்ணன் - சூர்யாவைப் பற்றி கார்த்தி போட்ட எமோஷனல் டுவிட்

Karthi : நடிகர் சூர்யா சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக டுவிட்டரில் #25YearsOfCultSuriyaism என்கிற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். 

2 Min read
Author : Ganesh A
Published : Sep 06 2022, 04:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, கடந்த  1997-ம் ஆண்டு இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். இப்படம் ஹிட் ஆனாலும், இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இவரெல்லாம் எதுக்கு நடிக்க வருகிறார் என்றெல்லாம் விமர்சித்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

விமர்சனங்களை கண்டு துவண்டுவிடாமல், தனது கடின உழைப்பால் அடுத்தடுத்த படங்களில் நடிகராக மெருகேறிய சூர்யா, இன்று நடிப்பின் நாயகன் என பட்டம் பெறும் அளவுக்கு உச்ச நடிகராக உயர்ந்துவிட்டார். சமீபத்தில் இவரின் சிறந்த நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. சூரரைப் போற்று படத்துக்காக அவருக்கு இவ்விருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

35

இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருகிறார். இவரது தயாரிப்பில் வெளியாகும் படமென்றால் நிச்சயம் ஹிட் என சொல்லும் அளவுக்கு, இவர் வெளியிட்ட படங்களில் பெரும்பாலானவை பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. சினிமாவில் தந்தையின் உதவியோடு அறிமுகமானாலும், இன்று தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கிறார் சூர்யா.

இதையும் படியுங்கள்... குழந்தை பெற்றுக்கொள்வதற்கு கல்யாணம் பண்ணனும்னு அவசியமில்லை... பரபரப்பை கிளப்பிய அஜித் பட நடிகை

45

நடிகர் சூர்யா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. அவர் முதன்முதலில் நடித்த நேருக்கு நேர் திரைப்படம் இன்று தான் ரிலீசானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் #25YearsOfCultSuriyaism என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தியும் அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தன் அண்ணனை பற்றி எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

55

அதில், “அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் மிகப்பெரிய பிளஸ் ஆக்க இரவும், பகலும் உழைத்தார். தன் சொந்த சாதனைகளை விஞ்சுவதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார். ஒரு நபராக தாராள மனசு கொண்ட இவர் அதனை இன்னும் பெரிதாக்கும் விதமாக ஆயிரக்கணக்கான தகுதியுள்ள குழந்தைகளின் வாழ்வை வடிவமைத்தார். அதுதான் என் அண்ணன். என குறிப்பிட்டு சிறுவயதில் சூர்யாவுடன் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார் கார்த்தி.

இதையும் படியுங்கள்...  ரொமான்ஸில் நயன் - விக்கிக்கு டஃப் கொடுக்கும்.. மஹாலட்சுமி - ரவீந்தர் ஜோடி..! வைரலாகும் நெருக்கமான புகைப்படம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்தி (நடிகர்)
கார்த்தி (நடிகர்)
சூர்யா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved