MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ambika Vs Radha: ரூ.97 கோடி வர வேண்டும்..காசோலையை ராதாதான் கொடுத்தார் - அம்பிகா பரபரப்பு குற்றச்சாட்டு

Ambika Vs Radha: ரூ.97 கோடி வர வேண்டும்..காசோலையை ராதாதான் கொடுத்தார் - அம்பிகா பரபரப்பு குற்றச்சாட்டு

Ambika: காசோலையை நான் திருடியதாக ராதா சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது கைப்பைக்குக்கூட பூட்டு போட்டு வைத்திருக்கும் ராதா கையெழுத்திட்ட காசோலைகளை பாதுகாப்பின்றி வீட்டில் வைத்துவிட்டுச் சென்றிருப்பாரா? என அம்பிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 23 2026, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ராதா   அம்பிகா இடையே வெடித்த மோதல்; என்ன நடந்தது?
Image Credit : Social Media

ராதா - அம்பிகா இடையே வெடித்த மோதல்; என்ன நடந்தது?

1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையேயான குடும்பச் சொத்து மற்றும் பண விவகாரம் தற்போது காவல்துறை புகார் வரை சென்றுள்ளது. குறிப்பாக ARS Garden சொத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றால் இருதரப்பும் மாறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
அம்பிகா மீது ராதா அளித்த புகார் என்ன?
Image Credit : X

அம்பிகா மீது ராதா அளித்த புகார் என்ன?

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா அளித்த புகாரில், அவர் கையொப்பமிட்டு வைத்திருந்த பழைய வெற்று காசோலைகள் தனது அனுமதியின்றி எடுக்கப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தி சுமார் ரூ.46 கோடி அளவிலான தொகையைப் பெற முயற்சி நடைபெற்றதாக தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

36
தற்போது அம்பிகா அளித்துள்ள விளக்கம் என்ன?
Image Credit : X

தற்போது அம்பிகா அளித்துள்ள விளக்கம் என்ன?

நடிகை ராதா அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து, அவரது சகோதரியும் மூத்த நடிகையுமான அம்பிகா இன்று (செப்டம்பர் 23, 2026) செய்தியாளர்களை சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். காசோலை விவகாரம் முதல் ஏ.ஆர்.எஸ். கார்டன் சொத்து பிரச்சினை வரை பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.

ஏஆர்எஸ் கார்டன் என் குழந்தை போன்றது

ஏஆர்எஸ் கார்டன் என்னுடைய குழந்தை போன்றது. அதுதொடர்பாக எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, அவர்தான் எங்களுடைய பெயரை வைக்கும்படி கூறினார். அப்படிப்பட்ட ஏஆர்எஸ் கார்டனின் பெயர்ப் பலகை மாற்றப்பட்டதைப் பார்த்தபோது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அந்த கார்டன் என்னிடம் இருந்து அபகரிக்கப்பட்டது. அதிலிருந்து என்னுடைய பெயரும் நீக்கப்பட்டுள்ளது. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். நான் இன்னும் உயிரோடுதானே இருக்கிறேன் என்று அம்பிகா வேதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஏஆர்எஸ் என்று ஒரு தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கும் எனக்கு இருக்கிறது. எங்கள் அம்மா இறப்பதற்கு முன்பே, ஏஆர்எஸ் கார்டன் பெயரில் அம்மாவின் பெயருக்குப் பதிலாக என்னுடைய பெயரைச் சேர்க்க வேண்டும் என்று ராதாவிடம் கூறியிருக்கிறார். இந்தத் தகவலை ராதாவின் கணவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஆனால், அம்மாவின் விருப்பம் குறித்து என்னிடம் எதுவும் கேட்காமல், ஏஆர்எஸ் கார்டனில் ராதா தனது பெயரை மட்டும் வைத்துவிட்டார்.

46
காசோலைகளை ராதாதான் கொடுத்தார்
Image Credit : youtube

காசோலைகளை ராதாதான் கொடுத்தார்

காசோலைகளைத் தான் திருடியதாக கூறப்படுவதை அம்பிகா மறுத்துள்ளார். சம்பந்தப்பட்ட காசோலைகள் திருடப்பட்டவை அல்ல என்றும், நீண்டகாலமாக இருந்து வரும் சொத்து, தொழில் மற்றும் நகைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ராதாவே அந்தக் காசோலைகளை தனக்கு வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராதா எனக்கு காசோலைகளைக் கொடுத்தது உண்மை. அந்தக் காசோலைகளுக்கு ‘Stop Payment’ கொடுத்ததும் ராதாதான். காசோலை பவுன்ஸ் ஆனதால் பாதிக்கப்பட்டது தான்தான். உண்மையில் நான் தான்புகார் கொடுத்திருக்க வேண்டும். நான் உண்மையை சொன்னால் ராதா சிறைக்கு செல்ல நேரிடும்.

56
கையெழுத்திட்ட காசோலையை பாதுகாப்பின்றி வைத்திருப்பாரா?
Image Credit : X

கையெழுத்திட்ட காசோலையை பாதுகாப்பின்றி வைத்திருப்பாரா?

காசோலையை நான் திருடியதாக ராதா சொன்னதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராதா தனது உடைமைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் நபர். எங்கள் வீட்டிலேயே தனது பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக்கொள்பவர் ராதா தான். தனது கைப்பைக்குக்கூட பூட்டு போட்டு வைத்திருப்பார். அப்படிப்பட்ட ஒருவர் கையெழுத்திட்ட காசோலைகளை பாதுகாப்பின்றி வீட்டில் வைத்துவிட்டுச் சென்றிருப்பாரா?

66
தங்க நகைகள் குறித்தும் குற்றச்சாட்டு
Image Credit : X

தங்க நகைகள் குறித்தும் குற்றச்சாட்டு

தனக்குச் சொந்தமான தங்க நகைகள் பலவும் ராதாவிடம் உள்ளது. தங்கம் என்றால் ராதாவுக்கு வீக்னெஸ். என்னுடைய நகைகளைத் திருப்பிக் கேட்டபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை. நான் தொலைபேசியில் அழைத்தாலும் ராதா எடுப்பதில்லை.

சொத்துகளைப் பிரித்துக்கொள்ளும் வகையில் ராதா தனக்கு 5 காசோலைகளை வழங்கினார். ராதா தரப்பிலிருந்து தனக்கு மொத்தமாக ரூ.97 கோடி வர வேண்டிருக்கும். மேலும், ஏ.ஆர்.எஸ். கார்டனில் உள்ள பார்ட்னர்ஷிப் பங்கும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று அம்பிகா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
The Paradise Movie First Review : நானியின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? 'தி பாரடைஸ்' முதல் விமர்சனம் இதோ
Recommended image2
Bigg Boss : ஆளவிடுங்கடா சாமி... கதவை திறக்கச் சொல்லி கதறி அழுத ஆனந்தி... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா?
Recommended image3
Varshini Venkat : பிக் பாஸ் நடிகையை அதிரடியாக கைது செய்த போலீஸ்... புழல் சிறையில் அடைக்கப்பட்டதன் ஷாக்கிங் பின்னணி
Related Stories
Recommended image1
Ambika vs Radha : ராதா புகாருக்கு அம்பிகாவின் பதிலடி.. “உண்மையில் பாதிக்கப்பட்டது நான்தான்” என தங்கைக்கு ட்விஸ்ட் கொடுத்த அக்கா
Recommended image2
Radha vs Ambika : சீட்டிங் பண்ணினாரா அம்பிகா? அக்கா மீது நடிகை ராதா கொடுத்த செக் மோசடி புகாரால் பரபரப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved