பிரபல நடிகருக்காக கதை எழுதி, இயக்க, தயாரான விவேக்..! கடைசி வரை கானல் நீராகவே கரைந்து போன ஆசை!
காமெடி நடிகர் விவேக்கின், மரணத்திற்கு பின் அவரை பற்றி பலருக்கும் தெரிந்திடாத சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில், சினிமாவில் நடிக்க வந்த காலத்திலேயே... படம் இயக்க தயாரான விவேக், பிரபல முன்னணி ஹீரோ ஒருவருக்கு கதையும் எழுதியுள்ளார் என்கிற தகவல் பிரபல சமூக வலைத்தளம் மூலம் வெளியாகியுள்ளது.
யாருமே எதிர்பார்த்திடாத இழப்புகளில் ஒன்று, நடிகர் விவேக்கின் மரணம். கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என, அவர் தெரிவித்த ஓரிரு தினங்களிலேயே திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
எனினும், தடுப்பூசிக்கும்.... நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆட்சியர் பிரகாஷ் ஆகியோர் தெரிவித்துள்ளதோடு, தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
நடிகர் விவேக்... தலைமை செயலகத்தில் அரசு பணியில் இருந்தாலும், திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையில் தான், கே.பாலச்சந்தர் அவர்களை சந்தித்து அவரிடம் துணை இயக்குனராக சேர முயற்சி செய்தார்.
ஆனால், அவரோ... விவேக்கின் செய்கைகளை பார்த்து, உனக்கு திரைப்படம் இயக்குவதை விட நடிப்பு தான் நன்றாக வரும் என தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தார்.
பின்னர் மெல்ல மெல்ல... தொடர்ந்து கே.பாலச்சந்தர் படங்களில் நடிக்க துவங்கி ஒரு நிலையில் முழு நேர காமெடி நடிகராகவும் மாறினார்.
இவர், துணை இயக்குனராக இருக்க ஆகவேண்டும் என்கிற ஆசையில்... பிரபல சூப்பர் ஹிட் ஹீரோ ஒருவருக்கு கதை கூட எழுதியுள்ளாராம்.
அவர் வேறு யாரும் இல்லை விஜயகாந்த் அவர்களுக்கு தான். விஜயகாந்த், கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் செம்ம பிஸியாக நடித்த போது தான் விவேக், விஜயகாந்துக்கு கதை ஒன்றை எழுதியுள்ளார்.
ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த கனவு கானல் நீராகவே போனது. ஒருவேளை விவேக் இயக்கி இருந்தால்... விஜயகாந்த் அந்த படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.