படத்தில் மட்டும் தான் பாச மழையா? அப்பா - அம்மா மணிவிழாவில் கலந்து கொள்ளாத விஜய்! மனதை பாரமாக்கிய போட்டோஸ்!
தளபதி விஜய்யின் தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் மணி விழா புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்ப்பவர்கள் நெஞ்சங்களை பாரமாக்கியுள்ளது.
தமிழர்களின் கலாச்சாரத்தை பொறுத்தவரை, எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும்... ஜாதிமத பேதம் இன்றி கலந்து கொண்டு, ஒருவருக்குள் இருக்கும் பகைமையை மறந்து ஒற்றுமையாக அந்த நிகழ்வை கொண்டாடுவார்கள்.
குறிப்பாக திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம், எவ்வளவு வேலை இருந்தாலும், அவை அனைத்தையும் நம் சொந்த பந்தங்களுக்காக ஒதுக்கிவிட்டு, வெளிநாடுகளில் இருந்து கூட வந்து பலர் இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வது உண்டு. இப்படி குடும்பத்தோடு கொண்டாட வேண்டிய தாய் - தந்தையின் 80ஆவது மணிவிழாவில் தளபதி விஜய் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுவது, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு நெஞ்சங்களையும் பாரமாக்கி உள்ளது.
மேலும் செய்திகள்: Tarun Majumdar: திரையுலகை உலுக்கிய பிரபல இயக்குனரின் மரணம்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!
தளபதி விஜய்க்கு தமிழ் திரையுலகில் எண்ணற்ற ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரது படம் மற்றும் அவரது குடும்பம் குறித்து எந்த செய்தி வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறி விடுகிறது.
இந்நிலையில் தற்போது விஜய் அவரது தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சியின் மணிவிழாவில் கலந்து கொள்ளாதது பேசுபொருளாக மாறியுள்ளது. பெற்ற பிள்ளை, மருமகள், பேர குழந்தைகள் இருந்தும் மிகவும் சாதாரணமாக இவர்களது மணிவிழா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: பிகினி உடையில் படு ஹாட்.. மொத்த அழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த யாஷிகா!! கண்ணை கட்டும் போட்டோஸ்!
விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒரே மகனாக இருந்து கொண்டு இப்படி மணிவிழாவை கூட புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரம் இது அவரது தனி பட்ட விருப்பம் என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
திரைப்படங்களில், பாசம், குடும்பம் குறித்து பக்கம் பக்கமாக வசனங்கள் பேசும் விஜய் உண்மையிலேயே தாய் - தந்தையின் மணி விழாவில் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மற்றும் பார்ப்பவர்கள் நெஞ்சங்களை பாரமாக்கியுள்ளது.
மேலும் செய்திகள்: ஜெபமலராய் புன்னகையை தெறிக்கவிடும் பிரியா பவானி ஷங்கர்... 'யானை' ஷூட்டிங் அன்சீன் போடோஸில் அவ்வளவு அழகு!!