ஜெபமலராய் புன்னகையை தெறிக்கவிடும் பிரியா பவானி ஷங்கர்... 'யானை' ஷூட்டிங் அன்சீன் போடோஸில் அவ்வளவு அழகு!!
நடிகை பிரியா பவானி, அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த 'யானை' படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இவர் ஜெபமலர் கதாபாத்திரத்தில் எடுத்துக்கொண்ட கேசுவல் போட்டோஸ் சிலவற்றை பிரியா பவானி வெளியிட்டுள்ளார்.
நடிகை பிரியா பவானி, அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த 'யானை' படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இவர் ஜெபமலர் கதாபாத்திரத்தில் எடுத்துக்கொண்ட கேசுவல் போட்டோஸ் சிலவற்றை பிரியா பவானி வெளியிட்டுள்ளார்.
கவர்ச்சியை கையில் எடுத்தால் தான் பட வாய்ப்புகளை தக்க வைத்து கொள்ளமுடியும் என சில இளம் நடிகைகள் திரைப்படங்களில் கவர்ச்சியை கட்டவிழ்த்து விடும் நிலையில், அழகு பதுமையாக நடித்து கூட நிலைக்கலாம் என நிரூபித்து வருபவர் பிரியா பவானி ஷங்கர்.
மேலும் செய்திகள்: திரையுலகை உலுக்கிய பிரபல இயக்குனரின் மரணம்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!
திரையுலகில் அடியெடுத்து வைத்த 5 வருடங்களிலேயே... அடுக்கடுக்கான பட வாய்ப்புகளை கைப்பற்றி படு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
செய்தியாளர், சீரியல் நாயகி என ஒவ்வொரு கட்டமாய் தாண்டி வந்த பிரியா பவானியா இது? என இளம் நடிகை முதல் முன்னணி நாயகிகள் வரை இவரது வளர்ச்சியை தற்போது வியர்ந்து வருகிறார்கள்.
தற்போது இவரது கைவசம், திருச்சிற்றம்பலம், பொம்மை, ருத்ரன், பத்து தல என 7 படங்கள் உள்ள நிலையில்... அண்மையில் வெளியான 'யானை' படமும் வெற்றிவாகை சூட்டியுள்ளது.
மேலும் செய்திகள்: குடும்பத்துடன் பீச்சில் குதூகலமாக போஸ் கொடுத்த நடிகை ரம்பா!
'யானை' படத்தில் பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள ஜெபமலர் கதாபாத்திரத்தில்... துளியும் மேக்அப் இல்லாத பேரழகியாய் நடித்துள்ளார்.
ஜெபமலர் கதாபாத்திரத்தில், புன்னகை பூத்த முகத்தோடு பிரியா பவானி ஷங்கர் தற்போது வெளியிட்டுள்ள அன்ஸீன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.
சூரிய வெளிச்சத்தில் மிளிரும் பிரியா பவானியின் பேரழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என... அவரது ரசிகர்கள் தாறுமாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் என்றால் பாருங்கள்.
மேலும் செய்திகள்: இரவில் போட்ட அந்த போஸ்ட்டால் குழம்பிப்போன ரசிகர்கள்... ஹேக் செய்யப்பட்டதா சமந்தாவின் இன்ஸ்டாகிராம்?