MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இரவில் போட்ட அந்த போஸ்ட்டால் குழம்பிப்போன ரசிகர்கள்... ஹேக் செய்யப்பட்டதா சமந்தாவின் இன்ஸ்டாகிராம்?

இரவில் போட்ட அந்த போஸ்ட்டால் குழம்பிப்போன ரசிகர்கள்... ஹேக் செய்யப்பட்டதா சமந்தாவின் இன்ஸ்டாகிராம்?

samantha : நேற்று இரவு சம்பந்தமே இல்லாத ஒரு நபரின் புகைப்படம் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து வந்தனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 05 2022, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் சமந்தா, இவர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இவர் நடித்திருந்த கதீஜா கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம்பிடித்தது. இதையடுத்து சமந்தா நடிப்பில் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் தயாராகி உள்ளன.

இதையும் படியுங்கள்... ஆதித்த கரிகாலனுக்கு நாமமா..? அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கிய பொன்னியின் செல்வன் பட போஸ்டர்!

24

இப்படங்களில் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி யசோதா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர தெலுங்கில் தயாராகும் குஷி என்கிற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் சமந்தா. இப்படத்தில் அவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்... ஹிருத்திக் ரோஷனின் பிடிவாதத்தால் விக்ரம் வேதா ரீமேக்கின் பட்ஜெட் எகிறியதா? - உண்மையை ஓப்பனாக சொன்ன படக்குழு

34

குஷி படத்தை விஜய் நிர்வாணா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாலிவுட்டில் ஒரு படம் மற்றும் வெப் தொடர் ஒன்றை கைவசம் வைத்துள்ளார் சமந்தா. இவ்வாறு கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பான் இந்தியா நடிகையாக கலக்கி வருகிறார் சமந்தா. இவர் படங்களில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார். இதனால் இவரை இன்ஸ்டாகிராமில் 2 கோடிக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... ஜெபமலராய் புன்னகையை தெறிக்கவிடும் பிரியா பவானி ஷங்கர்... 'யானை' ஷூட்டிங் அன்சீன் போடோஸில் அவ்வளவு அழகு!!

44

இதனிடையே நேற்று இரவு சம்பந்தமே இல்லாத ஒரு நபரின் புகைப்படம் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து வந்தனர். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த சமந்தாவின் மேனேஜர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பதிவு தவறுதலாக பதிவாகி உள்ளது என்றும், பின்னர் அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் கூறி இருந்தார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image2
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image3
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved