ஆதித்த கரிகாலனுக்கு நாமமா..? அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கிய பொன்னியின் செல்வன் பட போஸ்டர்!

Ponniyin selvan : பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பதை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன்படி நேற்று வெளியிடப்பட்ட முதல் போஸ்டரில் விக்ரமின் கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தது.

chiyaan vikram as aditya karikalan in Ponniyin selvan poster creates controversy

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... ஹிருத்திக் ரோஷனின் பிடிவாதத்தால் விக்ரம் வேதா ரீமேக்கின் பட்ஜெட் எகிறியதா? - உண்மையை ஓப்பனாக சொன்ன படக்குழு

chiyaan vikram as aditya karikalan in Ponniyin selvan poster creates controversy

பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பதை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன்படி நேற்று வெளியிடப்பட்ட முதல் போஸ்டரில் விக்ரமின் கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தது. அதன்படி அவர் இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளதாக குறிப்பிட்டு அவரின் தோற்றமும் அந்த போஸ்டரில் இடம்பெற்று இருந்தது.

இதையும் படியுங்கள்... Iravin Nizhal : ரிலீசுக்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாக்களில் 3 விருதுகளை தட்டித்தூக்கிய இரவின் நிழல்

அந்த தோற்றம் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விக்ரம் நெற்றியில் நாமமிட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் “சோழர்கள் சுத்த சைவர்கள், அதுமட்டுமின்றி சிவ பக்தர்கள், அவர்கள் எப்படி நாமமிட்டிருப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபுறம் இது நாமம் இல்லை வெற்றித்திலகம் எனவும் ஒரு தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது.

இதையும் படியுங்கள்... சுசிகணேசன் மீதான MeToo புகார் முதல் காளி தம் அடிக்கும் போஸ்டர் வரை.. தொடரும் சர்ச்சை- யார் இந்த லீனா மணிமேகலை?

படத்தின் கதைப்படி ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் தான் விக்ரம் நடித்துள்ளார். ஆனால் படக்குழு அவரது பெயரை ஆதித்ய கரிகாலன் என குறிப்பிட்டுள்ளது. ஆதித்த என்பதற்கு பதிலாக ஆதித்ய என்று வடமொழிச் சொல்லை பயன்படுத்தி தமிழை கொச்சைப்படுத்தி உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

இதுதவிர இதில் வரும் கொடியும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இதன் போஸ்டரில் காவி நிறக் கொடி இடம்பெற்றுள்ளது. ஆனால் சோழர்கள் சிவப்பு நிறக் கொடியைத் தான் பயன்படுத்தியதாகவும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். ஒரு போஸ்டர் வெளியானதற்கே இவ்வள்வு சர்ச்சை என்றால் படம் வெளியானால் என்னென்ன குழப்பங்கள் ஏற்படப் போகிறதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios