- Home
- Cinema
- Vijay :நட்பை மறக்காத தளபதி.. கல்லூரி நண்பர்களுடனான திடீர் சந்திப்புக்கு பின் நடிகர் விஜய் எடுத்த அதிரடி முடிவு
Vijay :நட்பை மறக்காத தளபதி.. கல்லூரி நண்பர்களுடனான திடீர் சந்திப்புக்கு பின் நடிகர் விஜய் எடுத்த அதிரடி முடிவு
Actor Vijay : நடிகர் விஜய் தன்னுடன் லயோலா கல்லூரியில் படித்த மாணவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது கல்லூரி நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து மனம்விட்டு பேசினாராம் விஜய்.

ரிலீசுக்கு ரெடியான பீஸ்ட்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து விஜய் நடிக்க உள்ள தளபதி 66 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தமாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
கல்லூரி நண்பர்களுடன் சந்திப்பு
இந்நிலையில், நடிகர் விஜய் தன்னுடன் லயோலா கல்லூரியில் படித்த மாணவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது கல்லூரி நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து மனம்விட்டு பேசினாராம் விஜய். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
நண்பர்களுக்கு விஜய் போட்ட கண்டிஷன்
தினந்தோறும் 10 நண்பர்களை அழைத்து அவர்களுடன் பேசி வருகிறாராம் விஜய். மேலும் பொருளாதார ரீதியாக சிக்கலில் உள்ள நண்பர்களுக்கு பண உதவி செய்ய உள்ளதாகவும் அவர்களிடம் உறுதி அளித்துள்ளாராம். ஒரு வருடத்துக்கு ஒரு முறையாவது இந்த மாதிரி நாம் சந்திக்க வேண்டும் என அன்புக் கட்டளையும் போட்டுள்ளாராம் தளபதி.
நண்பர்கள் ஹாப்பி
நடிகர் விஜய், இந்த சந்திப்பு குறித்து யாரும் வெளியே சொல்ல வேண்டாம் என நண்பர்களிடம் கூறி உள்ளார். அதையும் மீறி இந்த தகவல் கசிந்துள்ளது. பல வருடங்களுக்கு பின் நடிகர் விஜய்யை சந்தித்த அவரது நண்பர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அடுத்தமுறை வரும்போது குடும்பத்தோடு வருமாறு விஜய் அவர்களுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Beast Unseen Still : கையில் Gun உடன் கெத்து போஸ் கொடுத்த விஜய்... வைரலாகும் பீஸ்ட் அன்சீன் ஸ்டில்