Beast Unseen Still : பீஸ்ட் திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருப்பதாகவும், இப்படத்தில் நடிகர் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

பீஸ்ட் டீம்

நெல்சன் - விஜய் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், செல்வராகவன், யோகிபாபு, ஷான் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

5 மொழிகளில் ரிலீஸ்

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு நண்பன் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ளது.

அன்சீன் ஸ்டில்

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது பீஸ்ட் படத்தின் அன்சீன் ஸ்டில்லை படக்குழு வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் கெத்தாக போஸ் கொடுத்தபடி இருக்கு நடிகர் விஜய்யின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

KGF 2 உடன் மோதும் பீஸ்ட்

பீஸ்ட் திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருப்பதாகவும், இப்படத்தில் நடிகர் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக வருகிற ஏப்ரல் 14-ந் தேதி யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... Beast விஜய்க்கு போட்டியாக.. தமிழ்நாட்டில் KGF 2-வை பிரபலமாக்க களமிறங்கும் சூர்யா- இதென்ன புதுடுவிஸ்டா இருக்கு?