KGF 2 Trailer : விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக வருகிற ஏப்ரல் 14-ந் தேதி யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. 

ஏப்ரல் 13 முதல் பீஸ்ட்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக டோலிவுட் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

பீஸ்ட்டுக்கு போட்டியாக கே.ஜி.எஃப் 2

விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக வருகிற ஏப்ரல் 14-ந் தேதி யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜிஎஃப் 2 டிரைலர் இன்று வெளியீடு

படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நட்சத்திரம் தொகுத்து வழங்க உள்ளார். மேலும் சில பிரபலங்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டிரைலர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அந்த டிரைலரை நடிகர் சூர்யா வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பீஸ்ட் படத்துக்கு போட்டியாக களமிறங்கும் கே.ஜி.எஃப் 2-விற்கு நடிகர் சூர்யா உதவிக்கரம் நீட்டுவது விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... வலிமை நாயகியா இது?.. ஓபன் கோட் போட்டு... முன்னழகை பங்கமாக காட்டி பதறவிடும் ஹூமா குரேஷியின் செம்ம ஹாட் போட்டோஸ்